Read in English
This Article is From Aug 04, 2020

அயோத்தி ராமர் கோயில் இப்படித்தான் இருக்கும்!

கோபுரங்கள், தூண்கள் மற்றும் குவிமாடங்களுடன் கூடிய மூன்று மாடி அமைப்பு கொண்டதாக கோயில் உள்ளது

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அயோத்தியில் திட்டமிடப்பட்ட ராமர் கோயிலின் வடிவமைப்பு இன்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

கோபுரங்கள், தூண்கள் மற்றும் குவிமாடங்களுடன் கூடிய மூன்று மாடி அமைப்பு கொண்டதாக கோயில் உள்ளது. நாகரா பாணி கட்டிடக்கலையில் இந்த கோயில் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகரா பாணி கட்டிடக்கலையில் இந்த கோயில் கட்டப்படும்

16-ம் நூற்றாண்டை சேர்ந்த பாபர் மசூதி இந்துத்துவ ஆதரவாளர்களால் 1992ல் இடிக்கப்பட்டது. பின்னர் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் இஸ்லாமிய மசூதி கட்ட ஒதுக்கீடு செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நாளை நடைபெற இருக்கும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement