বাংলায় পড়ুন Read in English
This Article is From Feb 20, 2020

அயோத்தி ராமர் கோயில் கட்டும் கமிட்டியில் பிரதமரின் முன்னாள் உதவியாளருக்கு முக்கிய பொறுப்பு!!

விஷ்வ இந்து பரிஷ்த் அமைப்பின் முக்கிய தலைவரான சம்பக் ராய்க்கு, ராமர் கோயில் கட்டும் கமிட்டியில் பொதுச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

ராமர் கோயில் கட்டும் கமிட்டியில் சேர்மன் பொறுப்பு நிருபேந்திர மிஸ்ராவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் உதவியாளராக இருந்த நிருபேந்திர மிஸ்ராவுக்கு அயோத்தி ராமர் கோயில் கட்டும் கமிட்டியில் சேர்மன் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் அடிப்படையில் ராமர் கோயிலைக் கட்டும் கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தலைவராக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ராம ஜென்ப பூமி நியாஸின் நிருதிய கோபால் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். விஷ்வ இந்து பரிஷ்த் அமைப்பின் முக்கிய தலைவரான சம்பக் ராய்க்கு, ராமர் கோயில் கட்டும் கமிட்டியில் பொதுச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கமிட்டியில் இடம்பெற்றிருப்பவர்களின் பெயர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த பிப்ரவரி 5-ம் தேதியன்று 15 நபர்களைக் கொண்ட ராமர் கோயிலைக் கட்டும் அறக்கட்டளை ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். 

இதன்படி மொத்தம் 9 நபர்களைப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மற்ற பதவிகள் காலியாக வைக்கப்பட்டுள்ளன. 

Advertisement

கமிட்டியின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ராமர் கோயிலைக் கட்டும் பணியைத் தொடங்கும் நாள் குறித்து முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. 

மேலும் அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து அமைதியை நிலைநாட்ட உதவிய அனைவருக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

Advertisement

அடுத்த மாதம் மீண்டும் ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளையின் கூட்டம் நடைபெறும் என என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் ராம ஜென்ம பூமி அறக்கட்டளையைச் சேர்ந்த விஷ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் தெரிவித்தார். 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி ராமர் கோயில் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் மாதத்தின்போது அறிவிக்கப்பட்டது. இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இந்துக்கள் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றும், இதற்குப் பதிலாக 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்களுக்கு அயோத்தி நகருக்குள் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

Advertisement