This Article is From Sep 20, 2019

ராமர் கோவிலை தங்க செங்கற்களினால் கட்டுவோம் - இந்து மகாசபை தலைவர்

Ayodhya Case: அக்டோபர் 18க்குள் இதை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு கூட்டு முயற்சியை மேற்கொள்வோம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கூறினார். தேவைப்பட்டால் நீதிமன்றம் ஒவ்வொரு நாளும் அல்லது சனிக்கிழமைகளில் கூடுதல் ஒரு மணிநேரம் கூட வழக்கை விசாரிக்கும்.

ராமர் கோவிலை தங்க செங்கற்களினால் கட்டுவோம் - இந்து மகாசபை தலைவர்

இந்தியாவின் சனாதனா தர்ம இந்துக்களின் உலகம் பங்களிக்கும் என்று அவர் தெரிவித்தார்

New Delhi:

ராமர் கோவில் -பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு இந்துகளுக்கு ஆதரவாக வந்தால் அயோத்தியில் தங்கத்தால் ஆன செங்கற்கல்லைக் கொண்டு பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்படுமென இந்து மகாசபையின் சுவாமி சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

“நவம்பர் முதல் வாரத்தில் இந்து  மகாசபை மற்றும் இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தவுடன் கற்களால் அல்ல, தங்க செங்கல்லினால் ராமர் கோயிலை கட்ட முடிவு செய்துள்ளோம்” என்று சுவாமி சக்ரபாணி தெரிவித்தார்.

தங்கத்தால் ஆன ராமரின் பிரமாண்டமான கோவிலைக் கட்ட இந்தியாவின் சனாதனா தர்ம இந்துக்களின் உலகம் பங்களிக்கும் என்று  அவர் தெரிவித்தார்.

ராமர் கோவில் -பாபர் மசூதி வழக்கில் அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் புதன்கிழமை கூறியது. மத்தியஸ்த குழு தனது பணியை ‘வெளிப்படுத்தாமல்' தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் 18க்குள் இதை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு கூட்டு முயற்சியை மேற்கொள்வோம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கூறினார். தேவைப்பட்டால் நீதிமன்றம் ஒவ்வொரு நாளும் அல்லது சனிக்கிழமைகளில் கூடுதல் ஒரு மணிநேரம் கூட வழக்கை விசாரிக்கும். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வு பெறும் முன் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். 

முன்னாள் நீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.கலிஃபுல்லா, ஆன்மீக குரு ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஶ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய மத்தியஸ்த குழு மார்ச் மாதம் ஆலோசனைகளைத் தொடங்கியது. பல்வேறு மனுதாரர்களுடன் கலந்து ஆலோசித்து குழு “ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு முன் தன்னால் முடிந்ததை செய்யும்” என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. ஆனால், சில கட்சிகள் அதற்கு உடன்படவில்லை. 

.