சத்தீஸ்கர் தேர்தலில் அசாருடன் பிரசாரம் மேற்கொள்கிறார் சித்து
Raipur: சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் ஒன்றாக சத்தீஸ்கர் இருந்து வருகிறது. இங்கு நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படவுள்ளது.
2013-ல் நடந்த தேர்தலின்போது மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 49 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. காங்கிரசுக்கு 39 தொகுதிகள் கிடைத்தன.
இந்த நிலையில் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநில தேர்தலில் பேசும் நட்சத்திர பேச்சாளர்கள் 40 பேரின் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
இதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பெயர்களுடன் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அசாருதீன், நவ்ஜோத் சிங் சித்துவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இவர்களை தவிர்த்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அசோக் கெலாட், சுஷில் குமார் ஷிண்டே, அமரிந்தர் சிங், குலாம் நபி அசாத் உள்ளிட்டோரும் சத்தீஸ்கர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
முதல் கட்ட தேர்தல் நக்சல் பாதிப்பு மாவட்டங்களான பஸ்தார், பீஜப்பூர், தண்டேவாடா, சுக்மா, கொண்டகான், கங்கேர், நாராயண்பூர், ராஜநந்த்கான் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள 18 தொகுதிகளில் நடைபெறுகிறது.