Read in English
This Article is From Jul 22, 2019

''தமிழ்நாட்டில் 87 சதவீதம் என்ஜினியரிங் சீட்டுகள் நிரம்பவே இல்லை!!'' - விவரம் உள்ளே!

தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் மேற்பார்வையில் தமிழ்நாடு பொறியியல் அட்மிஷனுக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இதில் 2 கட்டங்கள் தற்போது முடிந்துள்ளன.

Advertisement
இந்தியா Edited by (with inputs from Agencies)

மூன்றாம் கட்ட கவுன்சிலிங் முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகின்றன.

New Delhi:

தமிழ்நாட்டில் 2 கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் தற்போது வரை 87 சதவீத என்ஜினியரிங் சீட்டுகள் நிரம்பவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ளது. 

அனைத்திந்திய அளவில் பொறியியல் படிப்புக்கான விருப்பங்கள் குறைந்து வருவதாக தொழில்நுட்ப கல்விக்கான ஆல் இந்தியா கவுன்சில் தகவல் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த விவரம் வெளியாகி உள்ளது. 

டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழ்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி மொத்தம் உள்ள 1.66 லட்சம் பொறியியல் சீட்டுகளில் 21 ஆயிரம் மட்டுமே கடந்த 18-ம்தேதி வரையில் நிரம்பியுள்ளது. 

இதேபோன்று மாநிலத்தில் உள்ள 494 கல்லூரிகளில் 27 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்திற்கும் அதிகமான சேர்க்கை நடந்துள்ளது. 

Advertisement

நடப்பாண்டில் 36 சதவீதம் அதாவது மொத்தம் 60 ஆயிரம் எஞ்சினியரிங் சீட்டுகள் நிரம்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 70 ஆயிரம் சீட்டுகள் மட்டுமே நிரம்பியிருந்தன. 

மூன்றாம் கட்ட கவுன்சிலிங் முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகின்றன.  அடுத்ததாக 4-வது கட்ட கவுன்சிலிங் நாளை தொடங்கி 28-ம்தேதி வரை நடைபெறும். 

Advertisement

Advertisement