This Article is From Mar 26, 2019

பாகுபலி படத்திற்குப் பின் நடிகை தமன்னா வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம்…!

ஹிந்தி பட வாய்ப்புகள் வந்தாலும் நல்ல பட வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பாகுபலி படத்திற்குப் பின் நடிகை தமன்னா வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம்…!

வாழ்க்கையிலும் சில துணிச்சலான முடிவுகளை எடுக்கும் அளவிற்கு மாற்றியுள்ளது.” Baahubali (courtesy baahubalimovie)

ஹைலைட்ஸ்

  • உயரம் என்றாலே எனக்கு பயம் -தமன்னா
  • சாகசக்காட்சிகளில் ஈடுபட்டதில்லை-தமன்னா
  • சுவாரஸ்யமான கதைக்களத்தில் மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளேன்.
New Delhi:

நடிகை தமன்னாவிற்கு இந்த ஆண்டு தொடக்கமே இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு படமான எஃப் 2 ஃபன் டூ ஃபிரஷ்ட்ரேஷன் மற்றும் தமிழில் கண்ணே கலைமானே படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து தேவி 2, தட் இஸ் மகாலட்சுமி, மற்றும் சாயிரா நரசிம்ம ரெட்டி ஆகியவை வெளியாக உள்ளது. மேலும் ஒரு தெலுங்கு மற்றும் தமிழ் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். 

பாகுபலி படத்தில் தான் சாகசங்களை செய்ததாகவும் வாழ்க்கையிலும் துணிச்சலான பல முடிவுகளை எடுத்து வருவதாக தமன்னா கூறுகிறார். 

ஹிந்தி மொழிப் படங்களில் நடிக்கவுள்ளீர்களா? 

நான் இப்போது ஹிந்திபடத்தில் கமிட்டாகவில்லை. ஹிந்தி பட வாய்ப்புகள் வந்தாலும் நல்ல பட வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் நல்ல படத்தில் அங்கமாக இருப்பதையே விரும்புகிறேன். சாய் ரா படம் இந்தியிலும் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

நடிகை தமன்னா இயக்குநர் எஸ்.எஸ் ராஜமெளலிக்கு நன்றியை தெரிவித்தார். பாகுபலி படத்தில் போர் புரியும்  பெண்ணாக ‘அவந்திகா' என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அந்தப் படம் நடிப்பு வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளார். “இதற்கு முன்பு பொதுவாக எனக்கு உயரம் என்றாலே பயம்,  ஆனால் இந்தப் படம் சாகசம் நிறைந்த சண்டைக் காட்சிகளைக் கொண்டது. இந்தப் படத்திற்காக தயாரான விதம் வாழ்க்கையிலும் சில துணிச்சலான முடிவுகளை எடுக்கும் அளவிற்கு மாற்றியுள்ளது.”

 மக்கள் என்னை கமர்சியல் ஹீரோயினாக பார்க்க வில்லை. நடிகராக எனது பங்களிப்பு அதிகமுள்ள படங்களையே செய்ய விரும்புகிறேன். நான் சுவாரஸ்யமான கதாபாத்திரங்களையே  தேர்வு செய்கிறேன். 

ஒரேவிதமான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதில்லை. வெவ்வெறு விதமான படங்களையே செய்ய விரும்புகிறேன். பிரியட் படமாக சாயி ரா உருவாகி வருகிறது. விஷாலுடன் விரைவில் நடிக்கவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.  

மீண்டும் ஆக்‌ஷன் படத்தில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, ஆக்‌ஷன் படத்தில் நடிக்க விருப்பமில்லை அதே நேரத்தில் மரத்தைச் சுற்றி பாடி ஆடும் ஹீரோயினாகவும் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.