Read in English
This Article is From Jun 23, 2020

7 நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைய மருந்து: பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ அறிவிப்பு!!

கொரோனா தடுப்பு மருந்து குறித்துப் பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதுவரை

Advertisement
இந்தியா Edited by (with inputs from ANI)

கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்து குறித்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Highlights

  • பாபா ராம்தேவ் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
  • உலக அளவில் இதுவரை கொரோனாவைக் குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை
  • பல நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து சோதனைகள் நடத்து வருகின்றன
Haridwar:

சாமியார் பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி' நிறுவனம் இன்று ‘ஆயுர்வேதிக் மருந்து கிட்' ஒன்றை வெளியிட்டு, அதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று 7 நாட்களில் குணமடையும் என்று அறிவித்துள்ளது. இந்த கிட் மூலம், ‘நோயாளிகள் மீது மருத்துவ ரீதியில் சோதித்ததில் 100 சதவீத சாதகமான முடிவுகள் வந்துள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல மூளைகளிலும் விஞ்ஞானிகள் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்க பாடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து பதஞ்சலியின் நிறுவனர் யோகா குரு ராம்தேவ், “இந்த மருந்தின் பெயர் கோரோனில் மற்றும் ஸ்வாசரி (Coronil & Swasari). நாடு முழுவதும் சுமார் 280 கொரோனா நோயாளிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வின்படி இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார் ராம்தேவ்.

கொரோனா தடுப்பு மருந்து குறித்துப் பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதுவரை கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்து குறித்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

“கொரோனாவுக்கு எதிரான மருந்து அல்லது தடுப்பு மருந்துக்காக மொத்த நாடும் உலகமும் காத்திருந்தது. இந்த நேரத்தில் பதஞ்சலி ஆராய்ச்சி மையம் மற்றும் NIMSம் இணைந்து ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனாவுக்கு எதிரான மருந்து குறித்து அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம்.

டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களில் இதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த மருந்தை 280 நோயாளிகளுக்குக் கொடுத்தோம். அனைவரும், 100 சதவீதம் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்கள். 

Advertisement

NIMS பல்கலைக்கழகத்தின் உதவியோடு 95 நோயாளிகள் மீது மருத்துவக் கட்டுப்பாடு ஆய்வையும் நாங்கள் மேற்கொண்டோம். நாங்கள் ஆய்வு நடத்திய 3 நாட்களில் 69 சதவீத நோயாளிகள் குணமடைந்துவிட்டனர். 7 நாட்களில் 100 சதவீத நோயாளிகள் குணமடைந்துவிட்டனர்” என்று பெருமிதத்தோடு கூறுகிறார் ராம்தேவ்.

இதைப் போன்று மாற்று மருந்துகள் பற்றி உலக சுகாதார அமைப்பான WHO முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது. ‘சில மேற்கத்திய, பாரம்பரிய மற்றும் வீட்டு மருந்துகள் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும், அறிகுறிகளை போக்கவும் உதவி செய்யும். அதே நேரத்தில் இந்த மருந்துகள் கொரோனா தொற்றை முற்றிலும் குணப்படுத்தும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. ஆகவே, இதைப் போன்ற மருந்துகளை உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்யாது. அதே நேரத்தில் கொரோனா தொற்றைப் போக்க பல மேற்கத்திய மற்றும் பாரம்பரிய மருந்துகள் சோதனையில் உள்ளன,' என்று விளக்கம் கொடுத்துள்ளது WHO.

Advertisement


 

Advertisement