This Article is From Feb 10, 2019

பள்ளத்தில் தவறி விழுந்த ஒரு வயது குட்டி யானை! - 3 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

கோவை மேட்டுப்பாளையம் வனப்பகுதியை ஒட்டியுள்ள புறநகர் பகுதியில் பள்ளத்திற்குள் தவறி விழுந்து சிக்கி தவித்த குட்டி யானை வனத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

பள்ளத்தில் தவறி விழுந்த ஒரு வயது குட்டி யானை! - 3 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

குட்டி யானை அதன் கூட்டத்தோடு மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டது

Coimbatore:

கோவை மேட்டுப்பாளையம் வனப்பகுதியை ஒட்டியுள்ள புறநகர் பகுதியில் பள்ளத்தில் தவறி விழுந்து சிக்கி தவித்த குட்டி யானை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வனப்பகுதியை ஒட்டியுள்ள புறநகர் பகுதியில் குட்டி யானை ஒன்று நீண்ட நேரமாக பிளிறும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் ஒரு வயதேயான குட்டி யானை ஒன்று பள்ளத்தில் சிக்கி தவிப்பதை கண்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, பள்ளத்தில் சிக்கி தவித்த அந்த குட்டி யானையை, சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். பின்னர் குட்டி யானையை அதன் கூட்டத்தோடு மீண்டும் சேர்த்துவைத்தனர்.

குட்டி யானை ஒன்று அதன் கூட்டத்தோடு சென்று கொண்டிருக்கும் போது, விவசாய நிலத்திற்கு அருகில் வெட்டி வைக்கப்படிருந்த பள்ளத்திற்குள் தவறி வழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

.