3 கோடி பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோவுக்கு 24,000 கமென்டுகளையும் கிடைத்தன.
ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் ஒரு வைரல் வீடியோ குறித்து ஒரு பெரிய விவாதமே கிளம்பியுள்ளது.
வீடியோவில், சாதாரண டி-ஷர்ட், ஷார்ட்ஸ் போட்டுள்ள ஒரு மனிதர் மலையின் உச்சியில் கால் நுனியில் எக்கி நிற்கிறார். பின்னர் அப்படியே எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பிரமாதமான பேக் ஃபிலிப் டைவ் அடிக்கிறார். அவருக்கு எதாவது ஆகிவிடுமோ என்று நெஞ்சு படபடக்கும் நேரத்தில் பத்திரமாக தரையில் நிற்கிறார். இந்த வீடியோவை பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “இந்த செயலைப் பார்த்து ஆச்சரியப்படுவதா அல்லது முட்டாள்தனம் என்று கண்டிப்பதா என தெரியவில்லை?” என்று பதிவிட்டார்.
இதயத்தின் துடிப்பை நிறுத்தச் செய்யும் வீடியோவைப் பார்க்க:
பல்லாயிரம் பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோவுக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் பலர் கருத்திட்டு வருகின்றனர்.
ஒருவர், ‘மிகப் பெரும் முட்டாள்தனம். சந்தேகமே இல்லை' என்று பிரபல இந்தி பின்னணி பாடகர் அட்னான் சமி கருத்து தெரிவித்துள்ளார்.
இன்னொரு ட்விட்டர் பயனரோ, ‘அவர் பிழைத்துக் கொண்டார். அதனால் இதைப் பார்த்து ஆச்சரியப்படலாம். இல்லையென்றால் முட்டாள்தனம் என்று ஒதுக்கிவிட வேண்டியதுதான்,' என்று ஆதரவுக் குரல் கொடுத்தார்.
மற்றொருவரோ, ‘வீடியோ எப்படி முடிந்திருந்தாலும் சரி… இது முட்டாள்தனமான செயல்தான்' என்று அடித்துச் சொல்கிறார்.
இந்த வீடியோ கடந்த ஆண்டு டிக் டாக் தளத்தில்தான் முதன் முதலில் பகிரப்பட்டிருந்தது. அங்கு 3 கோடி பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோவுக்கு 24,000 கமென்டுகளையும் கிடைத்தன.
Click for more
trending news