ஹைலைட்ஸ்
- கடந்த 2007ஆம் ஆண்டு அரசு கேபிள் தொடங்கப்பட்டது
- 2011ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியில் அரசு கேபிள் குறைந்த விலையில் கொடுக்கப்பட்
- இந்தியாவில் வேறு எங்கும் மாநில அரசின் சொந்த கேபிள் நிறுவனம் இல்லை
Chennai:
சென்னை: கடந்த 2017 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் கருத்து கணிப்புகள் செய்தி சேனல்களில் வெளிவந்து கொண்டிருந்தன.
கருத்து கணிப்பின் முடிவில், திரு.டிடிவி தினகரன் முன்னிலை பெற்றுள்ளதாக செய்தி வெளியிட்டது காவிரி செய்தி சேனல். இதனால் அரசு கேபிள் நெட்வர்க்கில் இருந்து காவிரி செய்தி சேனலை நீக்கப்பட்டது.
தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 1.2 கோடி தொலைக்காட்சி இணைப்புகள் அரசு கேபிள் வலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் ஆகிய நிலையிலும், காவிரி செய்தி சேனலை மீண்டும் அரசு கேபிளில் இணைக்கும் பணிகள் நடக்கவில்லை.
இது போன்ற நிறைய சம்பவங்கள் நடப்பதாக தமிழக பத்திரிக்கையாளர்கள் கொண்ட சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசை விமர்சித்து கருத்துக்களை வெளியிடும் ஊடகங்களை இருட்டடிப்பு செய்வதாக குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம், தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தை காட்சி செய்ததற்காக, அரசு கேபில் வலையில் இருந்து சத்தியம் தொலைக்காட்சி ஒரு நாள் நீக்கப்பட்டது. தூத்துக்குடி செய்தி விவகாரத்தில், நியூஸ் 18 தொலைக்காட்சியும் அரசு கேபிளில் இருந்து நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துகுடி போராட்டம் குறித்த விவாத நிகழ்சியை ஒளிபரப்பு செய்ததற்காக, அரசு கேபிள் தரவரிசையில் 124வது இடத்தில் இருந்து 499வது இடத்திற்கு புதிய தலைமுறை தள்ளப்பட்டது.
தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஊகங்கள் இருட்டடிப்பு செய்யப்படுவது குறித்து முன்னனி தொலைக்காட்சியின் அதிகாரிகள் கருத்து கூற மறுத்துவிட்டனர். எனினும், பெயர் வெளியிட விரும்பாத சில அதிகாரிகள் கூறியதாவது:
“மாலை 7 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில், ஆர்.கே நகர் தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளில் டிடிவி தினகரன் முன்னிலையில் உள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தோம். தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பில், ‘டிடிவி தான் வெற்றி பெறுவார் என்று நீங்கள் எப்படி செய்தி வெளியிடலாம், உடனடியாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பை நிறுத்துமாறு’ கூறினர். நாங்கள் தொடர்ந்து ஒளிபரப்பி கொண்டிருந்த அடுத்த அரை மணி நேரத்தில் அரசு கேபிள் வலையில் இருந்து எங்கள் சேனல் நீக்கப்பட்டது” என்றார்.
“தமிழக முதலமைச்சர் மீதான விமர்சனங்களை முன்வைத்ததற்கு, முதலமைச்சரின் சொந்த ஊரான சேலம் மற்றும் சுற்றியுள்ள கோவை, ஈரோடு பகுதிகளில் சேனல் ஒளிபரப்பை ரத்து செய்தனர். தூத்துக்குடி போராட்டத்தின் போதும், இருட்டடிப்பு செய்யப்பட்ட போது, மக்களின் ஆதரவால் மீண்டும் ஒளிபரப்பு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது” என்றார்
“அரசின் மீது வைக்கப்படும் குற்றங்கள் உண்மையல்ல. அவற்றை மறுக்கிறேன்” என்று தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
திமுகவிற்கும் மாறன் குழுமத்திற்கும் ஏற்பட்ட மோதலில், சுமங்கலி கேபிள் வலையில் இருந்து பிரிந்து, திமுக அரசினால் கடந்த 2007 ஆம் ஆண்டு அரசு கேபிள் நிறுவனம் தொடங்கப்பட்டது.
குறைந்த விலையில் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கடந்த 2011 ஆம் ஆண்டு, அதிமுக அரசால் மீண்டும் அரசு கேபிள் சேவை கொண்டுவரப்பட்டது.
ஆனால், அரசு கேபிள் மீண்டும் ஒரு மோனோபோலி சேவையாக மாறி வருகிறது என ஊடக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்
“தமிழ்நாட்டில் உள்ள செய்தித்தாள், தொலைக்காட்சி ஊடகளின் சுதந்தரம் கட்டுக்குள் உள்ளதை அனைவரும் அறிந்தது. தற்போது அது வேறு பரினாமத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் மாநில அரசின் சொந்த கேபிள் நிறுவனம் இல்லை. இது இந்திய தொலைத்தொடர்பு ஆணையத்திற்கு எதிரானது” என திரு.என்.ரவி, இந்து குழுமம் கூறினார்.
ஊடகங்கள் இருட்டடிப்பு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அரசு கேபிள் துறை அதிகாரிகள் மறுத்திவிட்டனர். மாநிலத்தில் உள்ள ஊடக சுதந்தரம் குறித்து அடுத்த மாதம் நடக்க இருக்கும் சந்திப்பில் தமிழக ஊடக துறையினர் கலந்து ஆலோசிக்க உள்ளனர். எனினும், தமிழக அரசின் அழுத்தத்தினால், எத்தனை செய்தி நிறுவனங்கள் வெளிப்படையாக இதை குறித்து விவாதிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.