This Article is From Jul 10, 2019

சந்திரயான் 2 : இந்தியாவின் அசர வைக்கும் 'பாகுபலி' ராக்கெட்டின் புகைப்படங்கள் வெளியீடு!!

இந்தியாவின் கனவுத் திட்டம் என்று வர்ணிக்கப்படும் சந்திரயான் 2- திட்டத்தை பாகுபலி ராக்கெட் செயல்படுத்த உள்ளது.

சந்திரயான் 2 : இந்தியாவின் அசர வைக்கும் 'பாகுபலி' ராக்கெட்டின் புகைப்படங்கள் வெளியீடு!!

பாகுபலி ராக்கெட்டின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.

Sriharikota:

சந்திரயான் -2 செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் இந்தியாவின் பிரமாண்ட ராக்கெட்டின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த ராக்கெட் பாகுபலி என்று பரவலாக அழைக்கப்பட்டு வருகிறது. 

விண்வெளித் துறையில் வளர்ந்த நாடுகளுக்கு கடும் போட்டி கொடுக்கும் விதத்தில் இந்தியா முன்னேறி வருகிறது. குறைந்த பொருட்செலவில் அசரவைக்கும் செயல்களைச் செய்து இந்திய விஞ்ஞானிகள் ஆச்சர்யம் அளித்து வருகின்றனர். அந்த வகையில் சந்திரயான் 2 என்ற மிக முக்கியத் திட்டத்தை இந்தியா நிறைவேற்ற உள்ளது.
 

3grlch5


இந்த திட்டத்தின்படி நிலாவின் நிலப்பரப்பில் ரோபோ இறக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதற்காக ரோபோ, செயற்கைகோள் உள்ளிட்டவை பாகுபலி ராக்கெட் மூலமாக வரும் 15-ம்தேதி நள்ளிரவு 2.51-க்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதனை நேரில் பார்ப்பதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் வருகை தரவுள்ளார். 
 

8mlps82


இந்த நிலையில் பாகுபலி ராக்கெட்டின் பிரமாண்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது. இந்த ராக்கெட் 6 லட்சத்து 40 ஆயிரம் கிலோ எடை கொண்டது. இதன் மூலம் 3 ஆயிரத்து 800 கிலோ எடைகொண்ட செயற்கைகோள் நிலாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 

சந்திரயான் 2 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலாவில் ரோபோவை இறக்கிய நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இதேபோன்ற முயற்சியை இஸ்ரேல் மேற்கொண்டு தோல்வி அடைந்தது. நிலவுக்கு அருகே சென்றபோது ராக்கெட் வெடித்து சிதறி திட்டம் தோல்வி அடைந்தது. 

2008-ல் சந்திரயான் 1- திட்டத்தை அமெரிக்கா, பிரிட்டன், பல்கேரியா உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு செயல்படுத்தியது. 
 

.