உலக இஸ்லாமியர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை ஆகஸ்டு மாதம் வர உள்ளது. தியாகத் திருநாளாக கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையின் போது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். விட்டிலேயே சமைக்க கூடிய எளிய வகை உணவுகளின் பட்டியல் இங்கே பகிரப்பட்டுள்ளது.
1. மட்டன் பிரியாணி
பாஸ்மதி அரிசியில் செய்யப்படும் மட்டன் பிரியாணி, பக்ரீத் பண்டிகை ஸ்பெஷல் உணவுகளில் ஒன்று. மேலும், உடலுக்கு தேவையான புரதச்சத்து, வைட்டமின், மினரல்ஸ், கார்போ ஹைட்ரேட் ஆகியவை அனைத்தும் பிரியாணியில் இடம் பெற்றுள்ளன.
2. ஷீர் குர்மா
பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்றான ஷீர் குர்மா, அனைவரது ஃபேவரைட்டாக இருக்கும். இந்த ஆண்டு பக்ரித் பண்டிகைக்கு, சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்து சமைத்து பார்க்கவும். உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் சுவையானதாகவும் இருக்கும். மேலும் ஊட்டச்சத்து நிறைந்த நட்ஸ் வகைகளை சேர்த்து சமைக்கலாம்.
3. சிக்கன் கொர்மா
சிக்கன், மஞ்சள், பூண்டு, இஞ்சி ஆகியவை சேர்த்து சமைப்பதனால், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. காரமான சுவையான உணவுக்கு சிக்கன் கொர்மா ஏற்றதாக அமையும்
4. கெபாப்ஸ்
கால்சியம், சின்க், இரும்புச்சத்து, புரதச்சத்து ஆகியவை நிறைந்த கெபாப் வகைகள் முழுமையான பண்டிகைக்கால உணவாக அமையும்.
5. ஸ்மூத்தி
பேரிச்சம்பழம், பால், நட்ஸ், தயிர், காய்கறிகள், ப்ரெஷ் பழங்கள் கொண்டு ஸ்மூத்தி தயாரிக்கப்படுகின்றன. அதிக நார்ச்சத்து நிறைந்த உணவாக உள்ளது.