This Article is From Aug 22, 2018

பக்ரீத் பண்டிகையின் முக்கியத்துவமும், கொண்டாட்டங்களும், உணவு வகைகளும்!

ஒரு பங்கு ஏழை எளியோருக்கும், இரண்டாம் பங்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும், கடைசி பங்கு தங்கள் குடும்பத்தினருக்கும் செல்கிறது

பக்ரீத் பண்டிகையின் முக்கியத்துவமும், கொண்டாட்டங்களும், உணவு வகைகளும்!

நாளை (புதன், ஆகஸ்ட் 22 அன்று) இந்தியா முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை, 'ஈத் அல்-அதா' என்றும் அழைக்கப்படுகிறது, இப்பண்டிகை "தியாகத் திருநாள்" என்றும் அழைக்கப்படுவதுண்டு. பக்ரீத் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் இரண்டாவது மிகப்பெரிய முஸ்லீம் பண்டிகை ஆகும். 

பக்ரீத் பண்டிகையின் வரலாறு: 

இறைவனுக்கு கீழ்ப்படிந்து தன் பக்தியின் அடையாளமாக, இப்ராஹிம் நபிகள் தனது சொந்த மகனையே தியாகம் செய்ய துணிந்ததை பக்ரீத் பண்டிகையின் மூலம் நினைவு கூறுகின்றனர் இஸ்லாமியர்கள். இப்ராஹிம் அவர்களின் மகனின் உயிர் தியாகத்தின் அடையாளமாக, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஆண் ஆடுகளை பலி கொடுத்து பக்ரீத் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இஸ்லாமிய சந்திர நாட்காட்டின்படி, அல் ஹிஜ்ஜாவின் கடைசி மாத மாதத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. துக்-அல்-ஹிஜாப் எனும் இஸ்லாமிய மாதத்தின் 10 வது நாளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பக்ரீத் அன்று இஸ்லாமிய குடும்பத்தினர் ஆட்டுக்கறி சமைத்து, தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருந்து வைப்பது மட்டுமின்றி ஏழை எளியோருக்கும் உணவளித்து மகிழ்வது வழக்கம். 

பக்ரீத் பண்டிகையின் முக்கியத்துவம்: 

இப்ராஹிம் நபிகளின் உயர்ந்த தியாகத்தை குறிப்பதால், பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இறைவன் மீதான தனது நம்பிக்கையை நிரூபிக்க, தனது 13 வயது மகன் இஸ்மாயிலின் உயிரை தியாகம் செய்யவும் துணிந்தார் இப்ராஹிம் நபிகள். இப்ராஹிம் நபிகளின் இந்த இறைநம்பிக்கையை கண்ட இறைவன், அவரது மகனின் கழுத்து வெட்டப்படும் முன் அந்த இடத்தில் ஒரு ஆட்டை மாற்றி வைத்தார். இந்த தியாகத் திருநாளே, இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. 

பக்ரீத் அன்று, இஸ்லாமியர்கள் பலி கொடுக்கும் ஆடுகள் மூன்று பங்குகளாக பிரிக்கப்படுகிறது. ஒரு பங்கு ஏழை எளியோருக்கும், இரண்டாம் பங்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும், கடைசி பங்கு தங்கள் குடும்பத்தினருக்கும் செல்கிறது. 

பக்ரீத் கொண்டாட்டங்கள்: 

பக்ரீத் பண்டிகை, அதிகபட்சமாக மூன்று நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது. உலகம் முழுக்க, ஒவ்வொரு நாட்டிலும் இப்பண்டிகை கொண்டாடப்படும் விதம் மாறுபடலாம். பள்ளிவாசலுக்கு சென்று தொழுது வேண்டுவது, ஆட்டுக்கறியை கொண்டு பிரியாணி சமைப்பதில் இந்நாளின் கொண்டாட்டங்கள் தொடங்குகிறது. மட்டன் பிரியாணி, மட்டன் கீமா, மட்டன் குருமா, கேசரி, பால் பாயாசம் ஆகியவை சில முக்கிய உணவுகளாக இருக்கும்.

.