ஹைலைட்ஸ்
- ஒய் நாட் ஸ்டுடியோவுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார் பாலாஜி மோகன்
- யோகி பாபு இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
- பாலாஜி மோகன் தயாரிக்கும் முதல் படம் இது
பாலாஜி மோகன் தயாரிக்கும் முதல் படம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
‘மாரி', ‘மாரி2' ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் பாலாஜி மோகன் “ஓபன் விண்டோ” என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தார். இதன் மூலம், திரைப்படங்கள், வெப்சீரீஸ், குறும்படங்கள் போன்றவற்றை தயாரிக்கயுள்ளதாக தெரிவித்திருந்தார்.
தற்போது இவரின் தயாரிப்பு நிறுவனமான ‘ஓபன் விண்டோ' மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புது முக இயக்குநர் மடோன் அஷ்வின், இயக்கத்தில் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ‘மண்டேலா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.