हिंदी में पढ़ें বাংলায় পড়ুন Read in English
This Article is From Sep 23, 2019

இந்தியாவுக்குள் ஊடுருவ எல்லையில் காத்திருக்கும் 500 தீவிரவாதிகள்! ராணுவம் எச்சரிக்கை!!

500 என்பது முந்தைய ஆண்டுகளில் வெளியான எண்ணிக்கையை விட இரு மடங்காகும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் கடும் விரக்தியில் உள்ள பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகள் மூலமாக இந்தியாவுடன் மறைமுகப் போர் நடத்தப் பார்க்கிறது.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

இந்தியாவுக்குள் ஊடுருவ ஜம்மு காஷ்மீர் எல்லையில் சுமார் 500 தீவிரவாதிகள் காத்திருப்பதாக இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

பண்டிகை தினங்களையொட்டி அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் தீவிரவாதிகள் ஈடுபடலாம் தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய ஆண்டுகளின்போது இதேபோன்ற அச்சுறுத்தல்களை இந்திய ராணுவம் முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தானின் பாலக்கோட்டிற்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்த நிலையில், தற்போது புதிய முகாம்கள் அங்கு செயல்பாட்டிற்கு வந்திருப்பதாக ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். 

Advertisement

புல்வாமாவில் 40 துணை ராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக கடந்த பிப்ரவரியில் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பாலகோட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தியிருந்தது. 

இந்த நிலையில் சுமார் 500 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் புகுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

500 என்பது முந்தைய ஆண்டுகளில் வெளியான எண்ணிக்கையை விட இரு மடங்காகும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் கடும் விரக்தியில் உள்ள பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகள் மூலமாக இந்தியாவுடன் மறைமுகப் போர் நடத்தப் பார்க்கிறது. 

பாகிஸ்தானின் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள சந்தேகிக்கப்படும் இடங்களில் போதிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
 

Advertisement