This Article is From Mar 13, 2019

Exclusive : பாலகோட் தாக்குதலில் இதுவரை வெளிவராத புதிய சாட்டிலைட் படங்கள் வெளியீடு!!

தீவிரவாதிகள் தங்கியிருந்த ஓட்டல், மர்க்கஸ் உள்ளிட்ட படங்கள் என்.டி.டி.வி.க்கு கிடைத்துள்ளன. இதற்கு முன்பாக கிடைத்த படங்களை விட இந்த படங்கள் தெளிவாக இருக்கின்றன.

Exclusive : பாலகோட் தாக்குதலில் இதுவரை வெளிவராத புதிய சாட்டிலைட் படங்கள் வெளியீடு!!

பிப்ரவரி 26-ம் தேதி விமானப்படை நடத்திய தாக்குதலில் பாலகோட்டில் இருந்த ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டது.

New Delhi:

பாலகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்த புதிய படங்கள் என்.டி.டி.வி.க்கு கிடைத்துள்ளன. இதற்கு முன்பாக தாக்குதல் தொடர்பாக கிடைத்த படங்களை விடவும் இவை சற்று தெளிவாக இருக்கின்றன. 

இந்த படத்தில் ஜெய்ஷ் தீவிரவாதிகள் பயன்படுத்தி ஹாஸ்டல் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் கட்டிடத்தின் கூரைகள் தெரிகின்றன. இது மலைப்பகுதியில் இருக்கும் வீடு போன்று தோற்றம் அளிக்கவில்லை. 

சாட்டிலைட் படங்களின் அடிப்படையில் ஒரு கட்டிடத்தின் மீது 3 துளைகள் காணப்படுகின்றன. இவற்றின் சுற்றளவு குறைந்தது 1 மீட்டாவது இருக்கும் என கருதப்படுகிறது. 

தாக்குதல் நடந்தது குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டதகவலில், ''விமானப்படை அழித்த பகுதியில் மவுலானா மசூத் அசாரின் சகோதரர் அதுல் ரப் அசாரின் வீடும் ஒன்று. அவர்தான் பாலகோட் தீவிரவாத மையத்தின் பொறுப்பாளராக இருந்தார்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 

qcrvmreo

சாட்டிலைட் புகைப்படத்தில் விடுதி ஒன்று காணப்படுகிறது. இது சுமார் 40 அடி அக லம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கூகுள் எர்த் ப்ரோ அளித்த தகவலின்படி இது குறைந்தது 35 அடி நீளமாவது இருக்கும். 
 

 
9b2igqig

 

முன்னதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட படத்தில் இந்த ஹாஸ்டல் இடம்பெறாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. ஒருவேளை இந்த ஹாஸ்டல் விமானப்படை தாக்குதலில் அழிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. 

இந்த ஹாஸ்டலை தவிர்த்து மேலும் 2 கட்டிடங்கள் இருந்ததாகவும், அவை பயிற்சியாளர்கள் தங்கும் அறை, சீனியர் தீவிரவாதிகள் தங்கும் அறை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
ஸ்பைஸ் 2000 ரகத்தை சேர்ந்த 3 குண்டுகள் பதான்கோட் தீவிரவாத முகாம் மீது வீசப்பட்டுள்ளன.  3 மீட்டர் அளவுக்கு விமானப்படை வீசிய குண்டுகள் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த 3 குண்டுகளையும் சேர்த்து மொத்தம் 6 குண்டுகளை விமானப்படை வீசியுள்ளது. 

பாலகோட் தாக்குதல் நடந்து இத்தனை நாட்கள் ஆன பின்னரும், அதுகுறித்த புகைப்படங்களை மத்திய அரசு இன்னமும் வெளியிடாதது ஏன் என்று தெரியவில்லை. 
.