தாத்தா பால் தாக்கரேவுடன் பேரன் ஆதித்யா தாக்கரே இருக்கும் புகைப்படம்.
சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் பிறந்த நாளான இன்று, அவரது பேரனும் மகாராஷ்டிர சுற்றுலாத்துறை அமைச்சருமான ஆதித்யா தாக்கரே பால் தாக்கரேவின் பழைய புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இன்று காலை முதற்கொண்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பால் தாக்கரே கடந்த 1926 ஜனவரி 23-ம்தேதி பிறந்தார். தனது 86-வது வயதில் கடந்த 2012-ல் மும்பையில் அவர் மறைந்தார்.
பால் தாக்கரேவுடன் பேரன் ஆதித்யா தாக்கரே இருக்கும் புகைப்படம் 41 ஆயிரம் லைக்குகளை இன்ஸ்டாவில் கடந்துள்ளது.
'நீங்கள் எப்போதும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்', 'மகாராஷ்டிராவில் இனிமேல் பால் தாக்கரேவை போன்ற ஒருவர் வரப்போவதில்லை', 'தாத்தாவின் கனவுகளை பேரன் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கிறோம்' என இன்ஸ்டா பயனர்கள் கமென்ட் செய்துள்ளனர்.
.
1966-ல் சிவசேனா பால் தாக்கரேவால் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு பால் தாக்கரே குடும்பத்தில் முதன் முறையாக பேரன் ஆதித்யா தாக்கரே ஓர்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
.
ஆதித்யா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தபோது, பால் தாக்கரேவின் அறை மற்றும் அங்கிருந்த பொருட்கள், அவரது படத்தை வணங்குவது போன்ற புகைப்படத்தை ஆதித்யா பதிவிட்டிருந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆதித்யா தாக்கரே ஆக்டிவாக உள்ளார். அவர் அடிக்கடிய பால் தாக்கரேவின் புகைப்படங்களை பதிவிடுகிறார்.
இன்றைக்கு பால் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிறந்த நாளையொட்டி பால் தாக்கரேவுக்கு எங்களது மரியாதையை செலுத்திக் கொல்கிறோம். மிகுந்த தைரியமும், மன உறுதிப்பாடும் கொண்டவர் பால் தாக்கரே. பொதுமக்கள் நலனுக்காக அவர் குரல் கொடுக்க தயங்கியதில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.