பாலசோர் மாவட்டத்தில் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் ஒடிஸாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவேட்பாளர் பிரதாப் சந்திர சாரங்கியும் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
பிரதாப் சந்திர சாரங்கியின் கட்டுபாடு மிக்க வாழ்க்கை முறையினால் அனைவராலும் அறியப்பட்டவர். பாஜக தலைவர்கள் தொண்டர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் பதவியேற்றுக் கொண்டார். பாஜக தலைவர் அமித் ஷா சாரங்கிக்கு கைதட்டி வரவேற்பு அளித்தார்.
64 வயதான பிரதாப் சந்திர சாரங்கி தன்னோடு போட்டியிட்ட இரண்டு பணக்கார வேட்பாளர்களை தோற்கடித்து நாடாளுமன்றத்தேர்தலில் பாலசோர் மாவட்டத்தில் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பிரதாப் சந்திர சாரங்கி உள்ளூரில் சென்று வர சைக்கிளையும் நகரத்திற்குள் சென்று வேலைகளை பார்க்க வாடகை ரிக்ஷாவை மட்டும் பயன்படுத்துகிறார். இவரின் எளிமையே இவருக்கான வெற்றியை தேடித் தந்துள்ளது. இவரின் சமூகப் பணிகள் பாலசோர் மாவட்டத்தில் மிகவும் பிரபலம்.
2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஒடிசாவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2014 அவர்தொகுதியில் இருந்து போட்டியிட்டார் ஆனால் ஜெனா என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்,
பிரதாப் சந்திர சாரங்கி பாஜகவின் தேசிய செயற்குழுவில் உறுப்பினராக உள்ளார். பாஜக ஒடிஸாவில் 8 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.