This Article is From Jan 02, 2019

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமலுக்கு வந்தது

தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமலுக்கு வந்தது

தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் (Use and throw) பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதன்பின்னர் 2019 ஜனவரி 1-ம்தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதன்படி நேற்று முதல் பிளாஸ்டிக் தடை தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து பல கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் நீக்கப்பட்டு அவற்றுக்கு பதிலாக மக்கக்கூடிய பைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பல கடைகளில் வாடிக்கையாளர்கள் துணிப்பையை கொண்டு வர வேண்டும் என்று அறிவிப்புகள் ஒட்டப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளில் பிளாஸ்டிக் கப்புகளுக்கு பதிலாக கண்ணாடி கிளாஸ்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இருப்பினும், சில இடங்களில் தமிழக அரசின் அரசாணையை பின்பற்றாமல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் தனிப்படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் வெகு விரைவில் சோதனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், விதிகளை மீறுவோர் மீதான அபராத தொகை விவரம் வெளியிடப்படவில்லை.

.