Read in English
This Article is From Apr 11, 2019

டிக்டாக் ஆப்பை தடை செய்வது பேச்சுரிமையை காயப்படுத்தும் செயல் : பைட்டான்ஸ் நிறுவனம்

கடந்தவாரம், தமிழகத்தில் உள்ள ஒரு நீதிமன்றம், டிக் டாக்கை தடை செய்யுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது.

Advertisement
இந்தியா

டிக்டாக் ஆப்பினை உருவாக்கியது சீனாவின் பைட்டான்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (Representational)

Delhi:

பிரபலமான வீடியோ ஆப்பான டிக்டாக் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் டிக்டாக் ஆப்பினை உருவாக்கிய சீனாவின் பைட்டான்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இதை பேச்சுரிமையை முடுக்கும் செயல் என்று உச்சநீதி மன்றத்தில் வாதாடியுள்ளது. 

பைட்டான்ஸ் நிறுவனம் உலகின் மிகவும் மதிப்பு மிகுந்த ஸ்டார்ட் -அப் நிறுவனமாகும். டிக்டாக் பல சின்னச் சின்ன வீடியோக்களை ஸ்பெஷல் எஃபக்ட்ஸுடன் பகிர்ந்து வருகிறது. இந்தியாவின் கிராமப்பகுதிகளில் கூட இது பிரபலமானது. இந்த வீடியோவினை பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களிலும் எளிதாக பதிவேற்றம் செய்யவும் முடியும். இந்தியாவில் 240 மில்லியம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்சார் டவர் கூறுகிறது.

இந்தியக் குடிமக்களின் உரிமைகளை குறைக்கும் விதத்தில் இந்த தடை உள்ளது. இந்த ஆப்பை பயன்படுத்தி பலரும் தங்களை க்ரியேட்டிவாக வெளிப்படுத்தி வருகின்றனர் என்று நிறுவனம் கோர்ட்டில் வாதாடியுள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமைக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது. 

Advertisement

இது குறித்து டிக்டாக் ஆப் நிறுவனமோ, தகவல் தொழில்நுட்ப அமைச்சகமோ பதிலளிக்கவில்லை. 

கடந்தவாரம், தமிழகத்தில் உள்ள ஒரு நீதிமன்றம், டிக் டாக்கை தடை செய்யுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது. இது ஆபாசத்தை ஊக்குவிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. திரைப்படத்தில் உள்ள ஜோக், நகைச்சுவை, வசனங்களே இதில்  அதிகமுள்ளன. சில இசைக்கு நடனமாடும் வீடியோக்களும் உள்ளன. 

Advertisement

டிக்டாக் சில பிரத்யேக வீடியோக்களை பரப்ப பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் எம். மணிகண்டன் டிக்டாக்கின் உள்ளடக்கம் தாங்க முடியாதவை என்று தெரிவித்தார். அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜகவும் இந்து தேசியவாதக் குழுவும் தடை விதிக்க வலியுறுத்தி வருகிறது.

பைட்டான்ஸ் நிறுவனம் இந்தியாவில் 250க்கு அதிகமானவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. இந்தியாவின் வணிகத்தை விரிவு படுத்தவும் திட்டமிட்டுள்ளது. 

Advertisement