This Article is From Oct 08, 2018

பாங்காக்கில் இரு குழுக்கள் இடையில் துப்பாக்கிச் சண்டை: இந்தியர் பலி!

பாங்காக்கில் இருக்கும் இரண்டு ரௌடி குழுக்களுக்கு இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில், 2 வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்

பாங்காக்கில் இரு குழுக்கள் இடையில் துப்பாக்கிச் சண்டை: இந்தியர் பலி!

பாங்காகில் நேற்று இச்சம்பவம் நடந்துள்ளது. (கோப்புப் படம்)

Bangkok:

பாங்காக்கில் இருக்கும் இரண்டு ரௌடி குழுக்களுக்கு இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில், 2 வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இருவரில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் ஆவார். 

இது குறித்து பாங்காக் போஸ்ட் என்ற செய்தி நிறுவனம், நேற்றிரவு பாங்காக்கில் உள்ள வாட்டர்கேட் பெவிலியன் ஓட்டலுக்கு அருகில் இரு ரௌடி கும்பலுக்கு இடையில் துப்பாக்கிச் சுடு நடந்துள்ளது. இதில் இருவர் இறந்துள்ளனர் என்று தகவல் தெரிவித்துள்ளது.

48 வயதாகும் இந்தியர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இறந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. காயமடைந்த ஐவரில் இருவர் இந்தியர்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

பாங்காகிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள், துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு அருகிலிருந்த மாலில் உணவருந்தி விட்டு, பேருந்துக்காக காத்திருந்துள்ளனர். அப்போது, இரு பாங்காக் ரௌடி கும்பலுக்கு இடையில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. அதில் தான் விபரீதமாக இந்திய சுற்றுலா பயணிகள் மாட்டிக் கொண்டுள்ளனர். 

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், ‘மாலுக்கு அருகிலிருந்த ஸ்னூக்கர் க்ளப்பில் இருந்து இரு குழுவைச் சேர்ந்தவர்களும் துப்பாக்கி, கத்தி மற்றும் பல ஆயுதங்களுடன் வெளியே ஓடி வந்தனர். கிட்டத்தட்ட 20 பேர் இருந்திருப்பார்கள். அவர்கள் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அவர்கள் சண்டையில் தான் சுற்றுலா பயணிகள் மாட்டிக் கொண்டனர்’ என்று சம்பவம் குறித்து விவரித்தனர். 

இந்த சம்பவம் குறித்து பாங்காகின் உள்ளூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. 

.