Read in English
This Article is From Oct 15, 2018

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைவு: பங்களாதேஷை சேர்ந்த 31 பேர் கைது!

இன்று காலை கஞ்ஜன்சுங்கா எக்ஸ்பிரஸில் அகர்தலா செல்லவிருந்த இந்த கும்பலை கைது செய்ததாக, ரயில்வே துணை கண்காணிப்பாளர் இஃப்தாகர் அலி கூறினார்

Advertisement
இந்தியா

அஸ்ஸாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நீக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Guwahati:

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த பங்களாதேசத்தைச் சேர்ந்த 31 பேரை குவஹாத்தி ரயில் நிலையத்தில் இன்று கைது செய்ததாக போலீசார் கூறினார்.

இன்று காலை கஞ்ஜன்சுங்கா எக்ஸ்பிரஸில் அகர்தலா செல்லவிருந்த இந்த கும்பலை கைது செய்ததாக, ரயில்வே துணை கண்காணிப்பாளர் இஃப்தாகர் அலி கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில், 8 பெண்கள் மற்றும் 13 குழந்தைகள் அடங்குவார்கள். இந்திய குடிமக்கள் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் அவர்களால் சமர்பிக்க இயலவில்லை. பிறகு அவர்கள் பங்களாதேசின் பகர்கத் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்கள்.

விசாரணையில், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த அவர்கள் பெங்களூருவில் வசித்து, சிறு வேலைகள் செய்து வந்ததது தெரியவந்துள்ளது.

Advertisement

ஞாயிறன்று பெங்களூரு எக்ஸ்பிரஸ் மூலம் குவஹாத்தியை அடைந்துள்ளார்கள். பின் அகர்தலா வழியாக பங்களாதேசத்திற்கு சென்று தனது குடும்பத்தினரை சந்திக்க இருந்தது தெரியவந்துள்ளது. என்று அலி கூறினார்.

Advertisement