বাংলায় পড়ুন Read in English
This Article is From Jul 21, 2019

எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ஒரு ஆண்டுவரை இந்தியாவில் தங்கலாம் -உள்துறை அமைச்சகம் அனுமதி

எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின், இஸ்லாமிய மதத்துக்கு எதிரான கருத்துக்களை எழுதி வந்ததாகக் குற்றம் சாட்டி வங்க தேசத்தில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொலை மிரட்டல் விடுத்தனர்

Advertisement
இந்தியா Edited by

பின் ஸ்வீடன் நாட்டு குடியுரிமை பெற்ற தஸ்லிமா 2004 முதல் டெல்லியில் வாழ்ந்து வருகிறார்.

New Delhi:

வங்கதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், இந்தியாவில் ஓர் ஆண்டு வரை கலந்து கொள்ளலாம் என்று  மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின், இஸ்லாமிய மதத்துக்கு எதிரான கருத்துக்களை எழுதி வந்ததாகக் குற்றம் சாட்டி வங்க தேசத்தில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் கடந்த  1994 ஆம் ஆண்டு வங்கதேசத்தை விட்டு வெளியேறிய தஸ்லிமா அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தார். பின் ஸ்வீடன் நாட்டு குடியுரிமை பெற்ற தஸ்லிமா 2004 முதல்  டெல்லியில் வாழ்ந்து வருகிறார்.

இந்தியாவில் தனக்கு நிரந்தரமாக குடியுரிமை வழங்க வேண்டும் என்று பலமுறை தஸ்லிமா நஸ்ரின் முந்தைய காங்கிரஸ், பாஜக அரசிடம் கோரிக்கை வைத்தும் அவருக்கு குடியுரிமை வழங்காமல், தங்கிக்கொள்வதற்கும் தற்காலிகமான அனுமதி மட்டும் வழங்கப்பட்டு வந்தது.

56 வயதான் தஸ்லிமா நஸ்ரினுக்கு கடந்த வாரம் கூடுதலாக 3 மாதம் இந்தியாவில் தங்கிக் கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்த நிலைய்ல் தற்போது கூடுதலாக ஒரு ஆண்டு தங்கிக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Advertisement

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ட்விட்டரில் தஸ்லிமா நஸ்ரின் கோரிக்கை விடுத்திருந்தார். அதில் “மரியாதைக்குரிய அமித் ஷா 3 மாதம் இந்தியாவில் தங்கிக் கொள்ள அனுமதி அளித்தமைக்கு நன்றி. இதற்கு முன் 5 ஆண்டுகள் தங்கிக் கொள்ள அனுமதி கேட்டபோது, எனக்கு ஒரு ஆண்டு மட்டுமே கிடைத்தது. ராஜ்நாத் சிங் எனக்கு 50 ஆண்டுகள் அனுமதி அளிப்பதாக உறுதியளித்தார். இந்தியா மட்டுமே என் தாய்வீடு. இந்த முறை 3 மாதங்கள் மட்டுமே தங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதை ஒரு ஆண்டாக உயர்த்த வேண்டும்” என கடந்த 17 ஆம்தேதி கோரிக்கை விடுத்திருந்தார்.

கோரிகையை ஏற்று ஒரு ஆண்டு வரை தங்க நீட்டித்து மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

Advertisement
Advertisement