বাংলায় পড়ুন Read in English
This Article is From Oct 08, 2019

உணவில் முடி: கோபத்தில் மனைவிக்கு மொட்டையடித்த கணவர்

உள்ளூர் பெண் உரிமை குழுவைச் சேர்ந்த சலிஷ்கேந்திரா ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று வன்புணர்வுகள் நடப்பதாக தெரிவித்தார்.

Advertisement
உலகம் Edited by

இந்நபர் செய்த குற்றத்துக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் (Representational)

Dhaka:

பழமைவாதம் மிக்க முஸ்லீம் தேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக மனித உரிமை குழுக்கள் எச்சரித்துள்ள நிலையில், பங்களாதேஷத்தில் காலை உணவில் தலை முடி இருந்ததைக் கண்டு மனைவிக்கு மொட்டையடித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கிராமவாசிகள் அதிகாரிகளிடம் கூறியதாவது, ஜாய்பூர் ஹாட்டின் வடமேற்கு மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் போலீசார் சோதனை நடத்தி 35 வயதான பாப்லு மொண்டலை கைது செய்தனர்.

“அவர் தனது மனைவி தயாரித்த அரிசி மற்றும் பால் கலந்த உணவில் முடியைக் கண்டு கோபமடைந்தார்” என்று காவல்துறைத் தலைவர் ஹாஹ்ரியார் கான் தெரிவித்துள்ளார்.

Advertisement

”அவர் முடியைப் பார்த்து கோபமடைந்து மனைவியை குற்றம் சாட்டினார். பின்னர் அவர் ஒரு பிளேட்டை எடுத்து மனைவியின் தலையை வலுக்கட்டாயமாக ஷேவ் செய்தார்” என்று கூறினார்.

காவல்துறை அதிகாரி இந்நபர் செய்த குற்றத்துக்கு  14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Advertisement

இந்த சம்பவம் பங்களாதேஷில் பெண்களை துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டங்கள் இருந்தபோதிலும் அதிகரித்து வரும் அடக்குமுறையை எடுத்துக்காட்டுகிறது.

உள்ளூர் பெண் உரிமை குழுவைச் சேர்ந்த சலிஷ்கேந்திரா ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று வன்புணர்வுகள் நடப்பதாக தெரிவித்தார்.

Advertisement

ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 630 பெண்கள் குறித்து 37 பேர் கொல்லப்பட்டனர், மேலும் ஏழு பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஏப்ரல் மாதத்தில், 19 வயது பள்ளி மாணவி தனது தலைமை ஆசிரியரின் உத்தரவின் பேரில் எரிக்கப்பட்ட பின்னர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து பெரும் போராட்டங்கள் 

Advertisement