This Article is From Apr 24, 2019

ஒபாமாவை நான் சந்திக்கும் போதெல்லாம் இந்த கேள்வியை கேட்பார்: மோடி

7 கட்டமாக நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான 3ஆம் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதனால் அரசியல், தேர்தல் தொடர்பான கேள்விகள் இல்லாமல், பிரதமர் மோடியிடம் பாலிவுட் நட்சத்திரம் அக்ஷய் குமார் நடத்திய நேர்காணல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் இல்லத்தில் வைத்து இந்த நேர்காணல் நடந்துள்ளது.

New Delhi:

பிரதமர் மோடியை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் அரசியல், தேர்தல் தொடர்பான கேள்விகள் இல்லாமல் நேர்காணல் நடத்தியுள்ளார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் இந்த பேட்டி காணும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை, தாயார், ஒபாமா, என்று பல தரப்பட்ட கேள்விகளை அக்‌ஷய் குமார் மோடியிடம் கேட்டுள்ளார். இந்த பேட்டியின் போது பிரதமர் மோடி பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து கொண்டு உள்ளார். பிரதமர் மோடி பேட்டியின் போது கூறியதாவது:

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா என்னை சந்திக்கும்போதெல்லாம், தற்போது நீண்டநேரம் தூங்குகிறீர்களா? என்ற கேள்வியை என்னிடம் கேட்பார் என்றார்.

நேர்காணலில் அக்ஷய் குமார், நீங்கள் ஒரு நாளைக்கு 3-4 மணி நேரம் தான் தூங்குகிறீர்கள், சராசரியாக உடலுக்கு 7 மணி தூக்கம் அவசியம் தேவை என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மோடி, முதல்முறையாக என்னை ஒபாமா சந்திக்கும்போது, என் இப்படி செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். தற்போது எப்போது என்னை சந்தித்தாலும், தற்போது தூக்க நேரத்தை அதிகரித்தீர்களா என்று தான் கேள்வி எழுப்புவார். ஆனால், 3 - 4 மணி நேரத்திற்கு மேலான தூக்கம் எனக்கு தேவையில்லை" என மோடி கூறியுள்ளார்.

இந்த நேர்காணல் குறித்து அக்ஷய் குமார் தனது டிவிட்டர் பதிவில், இதுவரை செய்திராத புதிய முயற்சியை மேற்கொள்கிறேன். அது என்ன என்பது குறித்து அறிய காத்திருங்கள் என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து, பரபரப்பான தேர்தல் நேரத்தில், பிரதமர் மோடியுடனான தான் நேர்காணல் மேற்கொண்டதாகவும், அது அரசியல் மற்றும் தேர்தலுடன் தொடர்புடையது அல்ல என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

.