Read in English
This Article is From Jun 06, 2019

ரெயின்போ டர்பனில் கலக்கிய சீக்கிய இளைஞரை பாராட்டிய ஒபாமா

“என் அடையாளத்தின் அனைத்து அம்சங்களையும் வெளிப்படுத்த முடியும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மற்றவர்களும் அதே சுதந்திரத்தை பெற தொடர்ந்து வேலை செய்வேன்”

Advertisement
விசித்திரம் Edited by

ஜிவந்தீப் கோலியின் வைரலான புகைப்படம்

அமெரிக்காவின்  சுயபாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் இருபாலின் ஈர்ப்பாளர்களுக்கான ஒரு மாதக் கொண்ட்டாட்டம் நடந்து வருகிறது. இதில் சாண்டியாகோவில் உள்ள நரம்பியல் மருத்துவரான சீக்கியர் ஒருவர் பலவண்ணங்கள் உள்ள டர்பனை அணிந்து இருந்தார். அவரின் புகைப்படம் இணையங்களில் வெகுவாக பரவி வருகிறது. 

சீக்கிய இளைஞருக்கு முன்னால் அதிபர் பராக் ஒபாமா தன் ஆதரவைத் தெரிவித்துள்ளார். இருபது நாட்களுக்கு முன்னர் இருபாலின ஈர்ப்பாளரான ஜிவந்தீப் கோலி என்ற சீக்கிய இளைஞர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை செய்திருந்தார். 

அதில் “நான் இருபாலின ஈர்ப்பாளராக இருப்பதில் பெருமையடைகிறேன்” என்று கேம்பஷன் போட்டு தன் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். 

Advertisement

“என் அடையாளத்தின் அனைத்து அம்சங்களையும் வெளிப்படுத்த முடியும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மற்றவர்களும் அதே சுதந்திரத்தை பெற தொடர்ந்து வேலை செய்வேன்” என்று கூறியிருந்தார்.

அவரது புகைப்படம் ஒருலட்சத்திற்க்கும் அதிகமான லைக்குகளை பெற்றது. 15,000க்கும் மேற்பட்ட ரீட்விட்கள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

அந்த இளைஞரை பாராட்டியவர்களின் பட்டியலில் திரு. ஒபாமாவும் இணைந்துள்ளார். 

Advertisement

இந்த நாடு கூடுதல் சமத்துவத்துடன் இருக்க உதவுவதற்கு நன்றி. உங்களின் டர்பனும் மிக அழகாக உள்ளதென ஒபாமா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement