அந்த வீடியோவில், தொழிலதிபரின் மனைவி நிஜ துப்பாக்கியை வைத்து வானத்தை நோக்கி சுடுகிறார்.
Bareilly: உத்தர பிரதேசத்தில் தொழிலதிபர் ஒருவர் அவரது குடும்பத்தினருடன் தீபாவளியை நிஜ துப்பாக்கி வைத்து வானத்தை நோக்கி சுட்டு கொண்டாடிய சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுதொடர்பாக பரவி வரும் அந்த வீடியோவில், தொழிலதிபரின் மனைவி நிஜ துப்பாக்கியை வைத்து வானத்தை நோக்கி சுடுகிறார். அவருடன் அவரது குழந்தைகளும் உடன் இருக்கின்றனர். இதேபோன்ற மற்றொரு வீடியோவில், தொழிலதிபர் வானத்தை நோக்கி சுடுகிறார். மேலும், பிரபல பாலிவுட் திரைப்படமான 'சோலே' படத்தின் வசனத்தையும் கூறுகிறார்.
இதுதொடர்பாக வெளியான தகவலின்படி, பாரேலி இசாத் நகரை சேர்ந்தவர் அஜய் மேத்தா. இந்த சம்பவத்தை பார்த்து, அதிர்ச்சியடைந்த அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பிற்காக தங்களது வீட்டிற்குள்ளே இருந்துள்ளனர்.
இது தொடர்பாக இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியான பிறகே போலீசார் இது விவகாரம் தொடர்பாக விசாரணையை துவங்கியுள்ளனர். எனினும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தாங்கள் பொம்மை துப்பாக்கி தான் பயன்படுத்தியதாக அந்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பொம்மை துப்பாக்கி தான் பயன்படுத்தியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், தற்போது அவர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக வரவழைக்கப்பட்டுள்ளார். அந்த துப்பாக்கிகள் உண்மையான துப்பாக்கிகள் என தெரியவந்தால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் ஒருவர் கூறும்போது, அந்த துப்பாக்கிகள் லைசன்ஸ் வாங்கிய துப்பாகிகள் என்று தெரியவந்தாலும், அதன் லைசன்சஸ் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளார்.