Read in English
This Article is From Oct 16, 2018

பிளாஸ்டிக் டப்பாவில் மாட்டிக்கொண்ட கரடியின் தலை!

’பக்கெட் ஹெட்’டின் தலை பிளாஸ்டிக் டப்பாவிலிருந்து விடுவிக்கப்பட்டது.

Advertisement
விசித்திரம்

கருப்பு நிற கரடி குட்டி தலை மூன்று நாட்களுக்கு பிறகு ஜாரிலிருந்து விடுவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில், ஒரு கரடி குட்டியின் தலை பிளாஸ்டிக் ஜாரில் மாட்டிக் கொண்டது. மூன்று நாட்கள் அந்த ஜாருடன் கரடி குட்டி சுற்றி வந்தது. அந்த கரடிக்கு ’பக்கெட் ஹெட்’ என செல்லப் பெயர் சூட்டடப்பட்டது.

பிளாஸ்டிக் ஜாருடன் சுற்றிவந்த கரடிக் குட்டியின் வீடியோவை பவுல் மோரிஸ் என்பவர் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

 
 

’பக்கெட் ஹெட்டை’ ஜாரில் மாட்டிக் கொண்டதிலிருந்து விடுவிக்கப்பட்ட வரை எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஞாயிறன்று மேரிலேண்டின் இயற்கை வளத் துறையினர் வெளியிட்டனர்.

 

 
 

இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்களை 200 பேர் பகிர்ந்துள்ளனர் மற்றும் பலரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். மேலும் ’பக்கெட் ஹெட்’ காட்டிற்கு சென்று விட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

Advertisement