ட்வீட்டரில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட புகைப்படம்
ட்வீட்டரில் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்தை குறிப்பிட்டு மீமாக மாறும் என்று ஒரு பயனர் பதிவிட்டிருந்தார். அதற்கு பிரதமர் மோடி அந்த பயனருக்கு பதிலளித்துள்ளார். அந்த புகைப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடி சூரிய கிரகணத்தை சிறப்பு கண்ணாடி அணிந்து பார்க்கிறார்.
இந்த பதிவை ரீட்வீட் செய்த பிரதமர் மோடி, வரவேற்கிறேன், மகிழ்ச்சியாக இருங்கள் என்று பதில் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த பதில் இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது. அதில் மோடி ஆதரவாளர்கள் செய்த ட்வீட்டுகள் சில,...
இந்த புகைப்படங்களை வைத்து சிலர் உடனடியாக மீம் செய்தும் ட்வீட் செய்துள்ளனர்.
முன்னதாக, நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவின் பல்வேறு இடங்களில் முழுமையாக தெரிந்தது. இருப்பினும் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் பல இடங்களில் கிரகணத்தை பார்க்க முடியவில்லை.
இதற்கிடையே சூரியகிரகணம் குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்தார்.
அதில், ''நாட்டு மக்கள் எல்லோரையும் போல நானும் சூரியக் கிரகணத்தைக் காண ஆர்வமாகவே இருந்தேன். ஆனால் டெல்லியில் மேகமூட்டம் இருந்ததால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை'' என்று தெரிவித்திருந்தார்.
இந்த சூரிய கிரகணமானது இன்று காலை 7.59 மணி அளவில் காணத்தொடங்கியது. இந்தியாவில், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இந்த கிரகணம் தெரிந்தது.