Read in English
This Article is From Oct 20, 2018

பஞ்சாப் ரயில் விபத்து: விபத்துக்கு முன்னர் உயரமான ரயில் தடத்தில் நின்ற மக்கள்!

பஞ்சாபின் அமிர்தசரஸில் நேற்றிரவு தசரா பண்டிகை கொண்டாடத்தின் போது, எதிர்பாராத விதமாக கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த மக்கள் மீது ரயில் பாய்ந்தது

Advertisement
நகரங்கள்

கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த மக்கள் மீது ரயில் பாய்ந்தது

Amritsar:

பஞ்சாபின் அமிர்தசரஸில் நேற்றிரவு தசரா பண்டிகை கொண்டாடத்தின் போது, எதிர்பாராத விதமாக கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த மக்கள் மீது ரயில் பாய்ந்தது. இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. ஜவுரா ஃபடாக் என்ற இடத்தில் தான் இந்த விபத்து நடந்துள்ளது. அங்கு இருந்த ரயில் தண்டாவளம், கொண்டாட்டத்தைப் பார்க்க ஒரு உயரமான இடத்தைத் தந்தது. இதனால் மக்கள் அதன் மீது ஏறி நின்று கொண்டாடத்தைக் கண்டுகளித்துள்ளனர். மேலும் தசரா பண்டிகையையொட்டி, பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. இதனால், ரயில் வருவதை மக்கள் பார்க்கவில்லை. இந்த அனைத்துக் காரணிகளும் சேர்ந்து விபத்துக்கு வித்திட்டுள்ளது.

தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:

  1. ஜவுரா ஃபடாகிற்கு அருகே, தோபி காட் என்ற இடத்தில் நேற்றிரவு 6:45 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஜலந்தரிலிருந்து அமிர்தசரஸிற்கு சென்ற ரயில் தான், மக்கள் மீது பாய்துள்ளது.
  2. 'ரயில் வேகமாக மக்கள் மீது பாய்ந்ததால், விபத்தில் யார் இறந்தார்கள் என்பதை கண்டுபிடிக்க சிரமமாக இருக்கிறது. இதுவரை 32 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன' என்று உள்ளூர் மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
  3. பல குழந்தைகளும் இந்த விபத்தில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் 300 பேர் இருந்தார்கள் எனவும் கூறப்படுகிறது.
  4. 'இந்த விபத்துக்கு முழுக் காரணம் உள்ளூர் நிர்வாகமும், தசரா பண்டிகையை கொண்டாட ஏற்பாடு செய்திருந்த அமைப்பும் தான். ரயில் வருவது குறித்து அவர்கள் எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை' என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.
  5. ரயில்வே போர்டு தலைவர் அஷ்வானி லோஹானி சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். ரயில்வே துறையின் மீது எந்தத் தவறும் இல்லையென்று அவர் தெரிவித்துள்ளார்.
  6. காங்கிரஸ் உறுப்பினரின் மகனான சவுரப் மித்து மதான் என்பவரால் இந்த தசரா பண்டிகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்ற ஆண்டு இங்கு பண்டிகை நடத்தப்படவில்லை.
  7. 'ராவணன் உருவ பொம்மை எரித்தப் பிறகு நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். அதன் பிறகு தான் எனக்கு நடந்த சம்பவம் குறித்து தெரியவந்தது. உடனே, நான் கமிஷனருக்கு போன் செய்து விசாரித்தேன். நான் சம்பவ இடத்துக்கு வர வேண்டுமா என்று கூட அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் வேண்டாம் என்று கூறிவிட்டார்' என்று நவ்ஜோத் கவுர் சித்து தெரிவித்துள்ளார்.
  8. பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங், அமிர்தசரஸுக்கு விரைந்துள்ளார். மீட்புப் பணிகளை நேரடியாக பார்வையிட அவர் சென்றுள்ளார். மேலும் அவர், ‘விபத்தில் உயிரழந்தவர்களுக்கு அரசு சார்பில் 5 லட்ச ரூபாய் கொடுக்கப்படும். காயமடைந்தவர்களுக்கு அருகிலிருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்' என்று கூறியுள்ளார்.
  9. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அகியோரும், மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று தெரிவித்துள்ளனர்.
  10. 'ராவணனின் உருவ பொம்மை, ரயில் தண்டவாளத்திலிருந்து 70 முதல் 80 மீட்டர் தூரத்திலேயே எரிக்கப்பட்டது. இதனால், பொம்மை எரிக்கப்பட்டவுடன், அருகிலிருந்தவர்கள் ரயில்வே தண்டவாளம் நோக்கி ஓடினர். இது தான் விபத்துக்குக் காரணமாக அமைந்துவிட்டது' என்று ரயில்வே துறை அதிகாரி கூறியுள்ளார்.
Advertisement