বাংলায় পড়ুন Read in English
This Article is From Jan 14, 2019

''கோவமா... எதையாவது உடைக்கணுமா'' நாங்க இருக்கோம் என்கிற‌து சீன நிறுவனம்!

"பெரும்பாலும் 25-35 வயதுக்குட்பட்டவர்கள் தான் அதிகம் வருகிறார்கள். இங்கு வன்முறையை வளர்ப்பது எங்கள் நோக்கமல்ல, அவர்களின் கோபத்தை தீர்த்து அமைதியாக்குவதே எங்கள் நோக்கம்" எங்கிறார் ஜின்.

Advertisement
உலகம்

மாதத்துக்கு 15,000 பாட்டில்களை வாடிக்கையாளர்கள் உடைக்கிறார்கள் என்கிறார் அதன் உரிமையாளர் ஜின் மென்ங்.

Beijing:

யார் மேலயாவது கோவம் என்றால் கைல இருக்கும் செல்போனை தூக்கி போட்டு உடைக்கும் பழக்கம் உடையவர்களுக்கு ஏற்ற ஸ்ட்ரெஸ் பஸ்டர் மையம் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. சமீபத்தில் க்யூ சியூ என்பவர் ஒரு அறையில் உள்ள ரேடியோ, சில பாட்டில்களை உடைத்து நொறுக்கியுள்ளார். அவரது இரு நண்பர்களும் டெலிபோன், ஸ்பீக்கர்கள், குக்கர் ஆகியவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். இதற்காக மூவரும் சேர்ந்து 23 டாலர்கள் கட்டணமாக செலுத்தியுள்ளனர்.

ஏன் இவர்கள் அடித்து நொறுக்கினார்கள் என்று கேட்டபோது, சீனாவின் பீஜிங்கில் 'ஆங்கர் ரூம்' (Anger room) என்ற ஒன்று உள்ளது. இதனை 25 வயதான ஜின் மெங்க் நடத்தி வருகிறார் என்பது தெரியவந்தது. "யாரெல்லாம் கோபமாக இருக்கிறார்களோ அவர்கள் இங்கு வந்து கட்டணம் செலுத்தி பொருள்களை உடைக்கலாம், அப்போது நாம் உடைப்பதற்கு ஏற்ப இசையை அவர்கள் ப்ளே செய்வார்கள்" என்கிறார்கள் அந்த மூவரும். 

க்யூ சியூ 16 வயதாக இருக்கும் போது கண்ணாடி அணிந்த, பற்களில் க்ளிப் அணிந்த உருவத்தில் இருப்பாராம். அப்போது கேலி செய்ததால் அந்த பள்ளி மீது உள்ள கோபத்தை இங்கு வந்து தீர்த்துக் கொண்டதாக கூறுகிறார். தான் பொருட்களை உடைக்கும் போது எல்லையற்ற மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறுகிறார்.

இந்த நிறுவனம் செப்டம்பரில் ஆரம்பிக்கப்பட்டது. மாதத்துக்கு 15,000 பாட்டில்களை வாடிக்கையாளர்கள் உடைக்கிறார்கள் என்கிறார் அதன் உரிமையாளர் ஜின் மென்ங். ஒரு மாதத்துக்கு 600 பேர் வருவதாக கூறப்படுகிற‌து.

"பெரும்பாலும் 25-35 வயதுக்குட்பட்டவர்கள் தான் அதிகம் வருகிறார்கள். இங்கு வன்முறையை வளர்ப்பது எங்கள் நோக்கமல்ல, அவர்களின் கோபத்தை தீர்த்து அமைதியாக்குவதே எங்கள் நோக்கம்" எங்கிறார் ஜின்.

Advertisement

இன்னொரு வாடிக்கையாளரான லி சாவ், "இங்கு வந்த பிறகு நான் அமைதியை உணர்கிறேன்" என்கிறார். அதேபோல் "உங்களிடம் அதிக பணம் இருந்தால் அதற்கேற்ப டிவி, கணினி, பர்னிச்சர் என எதை வேண்டுமானாலும் உடைக்கலாம்" என்றார்.

இங்கு எந்த பொருளை வேண்டுமானாலும் உடைக்கலாம். ஆனால் மனிதர்களை தாக்கக்கூடாது என்பது விதி. ஒரு பெண் தனது திருமண புகைப்படங்களை கொண்டு வந்துள்ளார். அதனை உடைத்துள்ளார். இப்படி தனது சொந்த பொருள்களை கொண்டு வந்து உடைக்கவும் இவர்கள் அனுமதிக்கிறார்கள். 

இந்த இடங்கள் நெகட்டிவ் எனர்ஜியை அழித்து பாசிட்டிவ் எனர்ஜியை தருவதாக இங்கு வரும் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Advertisement
Advertisement