Read in English
This Article is From Jul 18, 2018

“நாங்கள் மீட்க்கப்பட்டது ஓர் அதிசயம்” - தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் மகிழ்ச்சி

பல நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் ஒன்றிணைந்து, அவர்களை கடும் சிரமத்துக்கு இடையில் மீட்டனர்

Advertisement
உலகம்
Chiang Rai, Thailand:

தாய்லாந்து குகையில் கடும் வெள்ளத்துக்கு மத்தியில் சிக்கிக் கொண்டு, கடும் போராட்டத்துக்கு பின் மீட்க்கப்பட்ட 12 மாணவர்களும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

பல நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் ஒன்றிணைந்து, அவர்களை கடும் சிரமத்துக்கு இடையில் மீட்டனர். அவர்கள் அனைவரும் இப்போது மகிழ்ச்சியாக உள்ளனர். கண்டுபிடிப்பதற்கு முன் 9 நாட்களாக, அந்த இருண்ட குகைக்குள் மாட்டிக் கொண்ட அனுபவத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

அவர்கள் கண்டுபிடிக்கப்படும் வரையில், உணவில்லாமல் அந்த குகைக்குள் இருந்துள்ளனர். குகை வழியாக வழியும் தண்ணீரை மட்டும் பருகியபடி உயிர் பிழைத்திருந்திருக்கின்றனர். 

“நாங்கள் மீட்க்கப்பட்டது ஓர் அதிசயம்” என்கிறார் 14 வயது அடல் சாம்.

Advertisement

இப்போது அவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பல நாட்கள் இருண்ட குகைக்குள் இருந்து அவர்கள் மீட்க்கப்பட்டதால், அவர்கள் ஒருவகையான ஸ்டிரெஸ்ஸில் இருக்கக் கூடும் என்று உளவியல் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆகையால், மீடியாவின் கேள்விகள் அனைத்தும் முன்னதாகவே பெறப்பட்டு, மருத்துவர்களிடம் கொடுக்கப்பட்டது. அவர்கள் சில கேள்விகளை நீக்கிவிட்டு மீதமுல்லவற்றை கேட்க அனுமதித்தனர்.

மேலும், அந்த மாணவர்களை 1 மாதத்துக்கு ஊடகத்திடம் பேச அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். பல நாட்கள் பிரிவுக்கும், பதபதைக்கு பிறகு அவர்கள் குழந்தைகளை சந்தித்த போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement
Advertisement