This Article is From Jul 20, 2020

வாரத்தில் இரண்டு நாட்கள் முழு ஊரடங்கிற்குத் தயாராகிறது மேற்கு வங்கம்!

மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,278 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 42 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாரத்தில் இரண்டு நாட்கள் முழு ஊரடங்கிற்குத் தயாராகிறது மேற்கு வங்கம்!

ஹைலைட்ஸ்

  • மேற்கு வங்கம் இரண்டு நாட்களுக்கு முழுமையான பூட்டுதலுக்குச் செல்லும்
  • மாநில உள்துறை செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய் தற்போது தெரிவித்துள்ளார்.
  • இந்த வாரத்தில் வியாழன் மற்றும் வெள்ளியில் முழு ஊரடங்கு இருக்கும்
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 11 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், தற்போது மேற்கு வங்கம் இரண்டு நாட்களுக்கு முழுமையான பூட்டுதலுக்குச் செல்லும் என மாநில உள்துறை செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய் தற்போது தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்தில் வியாழன் மற்றும் வெள்ளியில் முழு ஊரடங்கு இருக்கும் என்றும் இடுத் வாரத்தில் இது புதன்கிழமைகளில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் சில பகுதிகளில் சமூக பரவல் குறித்த கருத்துக்கள் உள்ளது என உள்துறை செயலாளர் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,278 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 42 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,112 பேர் உயிரிழந்துள்ளனர்.

.