வலது முழங்கால் மறைத்து வைத்து தங்கம் கடத்தப்பட்டுள்ளது.
Kolkata: இந்தியா - வங்காள தேச எல்லையில் ஆய்வு மேற்கொண்ட எல்லை பாதுகாப்பு படையினர் ரூ. 95 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள முசாபர்பூர் எல்லைப் பகுதியில் தங்கம் கடத்தப்படுவதாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிரடி ஆய்வில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படையினர் லோக்மான் பால் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் தனது முழங்காலில் கட்டுகளைக் கட்டி அதற்குள் தங்க கட்டிகளை மறைத்து கடத்தியது தெரியவந்தது.
அவரிடம் இருந்து எல்லை பாதுகாப்பு படையினர் தங்க கட்டிகளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ. 95 லட்சம். கைது செய்யப்பட்டவர் பக்தா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
தெற்கு வங்காள சர்வதேச எல்லைப் பகுதியில் கடந்த 10 மாதங்களாக தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சுமார் ரூ. 8 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 10 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.