বাংলায় পড়ুন हिंदी में पढ़ें
This Article is From Jan 21, 2020

சிஏஏ-வுக்கு எதிராக சட்டசபை தீர்மானம் போடுவது நிச்சயம்: மம்தா பானர்ஜி அதிரடி!!

கடந்த டிசம்பர் மாதம், மத்திய அமைச்சரவை என்பிஆர் நடைமுறைகளை மேற்கொள்ள ஒப்புதல் கொடுத்தது.

Advertisement
இந்தியா Edited by

என்ஆர்சி-ஐ அமல் செய்ய என்பிஆர்தான் உறுதுணையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Kolkata:

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவுக்கு எதிராக இன்னும் சில நாட்களில் மேற்கு வங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் சிஏஏவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் கூட்டப்பட்ட எதிர்க்கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஜனவரி 9 ஆம் தேதி மம்தா, என்ஆர்சி மற்றும் சிஏஏவுக்கு எதிராக மேற்கு வங்க சட்டசபையில் செப்டம்பர் மாதமே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டதால் மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய தேவை இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகளோ, செப்டம்பரில் சிஏஏ இருக்கவில்லை என்று சுட்டிக்காட்டின. ஆனாலும் மம்தா, அசராமல் மல்லுக்கட்டினார். 

இந்நிலையில் கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள், சிஏஏவுக்கு எதிராக சட்டசபை தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதால், தற்போது மம்தா, தனது நிலைப்பாட்டில் மாற்றியுள்ளதாக தெரிகிறது. 

Advertisement

“சிஏஏ குறித்து முடிவெடுக்கும் முன்னர், அந்தச் சட்டம் குறித்து முழுதாக தெரிந்து கொள்ளுங்கள். தேசிய மக்கள் தொகை பதிவேடான என்பிஆர் மிகவும் ஆபத்தானது. அது என்ஆர்சி மற்றும் சிஏஏவுடன் தொடர்புடையதுதான். அனைத்து மாநிலங்களிலும் தீர்மானம் நிறைவேற்றி, இந்தச் சட்டங்களை திரும்ப பெறச் செய்ய வேண்டும்,” என்று மம்தா பேசியிருப்பது குறிப்பிடத்தகது. 

கடந்த வாரம் காங்கிரஸ் தலைமையில், டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக வியூகம் வகுக்க எதிர்க்கட்சிகள் கூடின. ஆனால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதைத் தவிர்த்தார் மம்தா. அந்தக் கூட்டத்திலும் பாஜக ஆளாத மாநில முதல்வர்கள், என்பிஆர் நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

Advertisement

எதிர்க்கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணித்தது குறித்து மம்தா, “சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக முதலாவதாக பேரணியை ஆரம்பித்தது நான்தான். காங்கிரஸும் இடதுசாரிகளும் செய்வது வன்முறை,” என்று விமர்சத்திருந்தார்.

என்ஆர்சி-ஐ அமல் செய்ய என்பிஆர்தான் உறுதுணையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. என்ஆர்சி-ஐ அமல் செய்வதன் மூலம், நாட்டில் சட்டத்துக்குப் புறம்பாக இருப்பவர்கள் கண்டறியப்படுவார்கள் என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால் இந்தச் சட்ட நடைமுறைகளை விமர்சிப்பவர்களோ, முஸ்லிகளுக்கு எதிரானதாக இவை இருக்கின்றன என்று கூறுகின்றனர். 

Advertisement

கடந்த டிசம்பர் மாதம், மத்திய அமைச்சரவை என்பிஆர் நடைமுறைகளை மேற்கொள்ள ஒப்புதல் கொடுத்தது. ஆனால் தேசிய அளவில் என்ஆர்சிக்கு எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தற்போது, அதை அமல் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது மத்திய அரசு. 


 

Advertisement