Read in English
This Article is From Sep 25, 2018

கனமழையால் பெங்களூரு ஏரியில் 10 அடி உயரத்திற்கு எழும்பிய மாசு நுரை

நாட்டிலேயே மாசடைந்த ஏரிகளில் முக்கியமானது என்ற பெயர் பெங்களூரு பெலாந்தூர் ஏரிக்கு உண்டு

Advertisement
நகரங்கள் Posted by

பரபரப்பாக இயங்கும் சாலையில் குவிந்த மாசு நுரை

Highlights

  • கனமழையால் சாலை முழுவதும் மாசு நுரை பெருகியுள்ளது.
  • பெலாந்தூர் ஏரி அதிகம் பாதிக்கப்பட்டது என்று பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது
  • ஏரியை தூய்மைப்படுத்த புதிய திட்டம் கோலாரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது
Bengaluru:

நாட்டிலேயே மாசடைந்த ஏரிகளில் முக்கியமானது என்ற பெயர் பெங்களூரு பெலாந்தூர் ஏரிக்கு உண்டு. இங்குள்ள தண்ணீரில் நுரை ஏற்பட்டு அருகில் பரபரப்பாக இயங்கும் சாலையில் படர்வதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்றிரவு பெங்களூருவில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் மீண்டும் மாசு நுரை ஏற்பட்டு சாலையில் படரத் தொடங்கியுள்ளது.

நாட்டிலேயே அதிக மாசுள்ள ஏரி என்ற பெயர் பெலாந்தூர் ஏரிக்கு உண்டு

சில பகுதிகளில் 10 அடி உயரத்திற்கு குட்டி மலை போன்று மாசு நுரை காட்சியளிக்கிறது. பெலாந்தூரை சுற்றிலும் ஏற்பட்டுள்ள மாசு நுரை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. இதற்கு ரசாயன மற்றும் மாசடைந்த நீர் ஆற்றில் கலப்பதுதான் முக்கிய காரணம்.
இந்த விவகாரம் தொடர்பாக பல வழக்குகள் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு வந்துள்ளன. பெலாந்தூர் ஆறு நாட்டிலேயே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.

மாசு பிரச்னைக்கு தீர்வுகாண முடியாமல் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

இதனை தூய்மைப்படுத்துவதற்காக ரூ. 1,400 கோடி செலவில் கோலார் மாவட்டத்தில் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின்போது, பெலாந்தூர் ஏரியில் மாசடைந்த பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் எழுந்த கரும்புகையால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். மீண்டும் கடந்த ஜனவரியில் தீ விபத்து ஏற்பட்டது. இதை அணைக்க 5 ஆயிரம் ராணுவ வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.

Advertisement