Read in English
This Article is From May 06, 2019

பேருந்துக்குள் குட்டி தோட்டத்தை உருவாக்கிய ஓட்டுநருக்கு குவியும் பாராட்டுகள்

கடந்த மூன்று அல்லது நான்கு வருடங்களாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தோட்டத்தை அமைத்து பராமரித்து வருவதாகக் கூறினார். 

Advertisement
Karnataka Edited by

4 செடிகளை பேருந்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் வைத்து அன்றாடம் தண்ணீர் ஊற்றி முறையாக பராமரித்தும் வருகிறார்.

Bengaluru:

பயணிகளுக்கு சுற்றுப்புறச் சூழல் குறித்த விழிப்புணர்வை உருவாக்க ஒரு தனித்துவமான வழியைக் கண்டறிந்துள்ளார் பேருந்து ஓட்டுநர். பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்தில் 27 ஆண்டுகளாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வரும் நாராயணப்பா தன் பேருந்தினை பசுமையான செடிகளை தொட்டியில் வளர்த்து சிறிய தோட்டத்தையே உருவாக்கியுள்ளார்.  இந்த ஓட்டுநர்  காவல் பைலசந்திரா மற்றும் யஸ்வந்த்பூருக்கும் இடையே இயக்கி வருகிறார். 

கடந்த மூன்று அல்லது நான்கு வருடங்களாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தோட்டத்தை அமைத்து பராமரித்து வருவதாகக் கூறினார். 

இந்த குட்டி தோட்டத்தில் 14 செடிகளை பேருந்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் வைத்து அன்றாடம் தண்ணீர் ஊற்றி முறையாக பராமரித்தும் வருகிறார். 

Advertisement

பேருந்துக்குள் பசுமையான செடிகளை பார்ப்பது உற்சாகமாக உள்ளது என்று இவரின் முயற்சிகளை பயணிகள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். தன்னுடைய பிஸியான வேலைச்சூழலிலும் இதைப் பொறுப்புடன் செய்கிறார் என்று பயணிகள் பாராட்டுகின்றனர்.

Advertisement