This Article is From Jun 06, 2018

கைவிடப்பட்ட குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் காவலர்

தொப்புள் குடி கழுத்தோடு சுற்றி இருக்க, இரத்தக் கறைகளுடன் மோசமான நிலையில் குழந்தை இருந்தது

கைவிடப்பட்ட குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் காவலர்

The abandoned baby was named Kumaraswamy, after Karnataka's new chief minister

ஹைலைட்ஸ்

  • கட்டிட வேலைப்பாடுகள் நடந்த இடத்தில் பிளாஸ்டிக் கவரில் குழந்தை
  • உடனடியாக மருத்துவமனைக்குச் கொண்டு சென்று சிகிச்சை
  • கைவிடப்பட்ட குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் காவலர்
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில், கட்டிட வேலைப்படுகள் நடக்கும் இடத்தில், குழந்தை ஒன்று ப்ளாஸ்டிக் கவர்களால் சுற்றப்பட்டு இருந்ததாக தி ஹிந்துவில் பதிவிடப்பட்டிருந்தது.

உதவி துணை ஆய்வாளர் நாகேஷ் சம்பவ இடத்துக்கு விரைந்தார். “தொப்புள் குடி கழுத்தோடு சுற்றி இருக்க, இரத்தக் கறைகளுடன் மோசமான நிலையில் குழந்தை இருந்தது” என்று ஆய்வாளர் கூறினார்.

உடனடியாக, குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இலவசமாக மருத்துவர்கள் சிகிச்சை பார்த்தனர், பின்பு, குழந்தை காவல் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

மூன்று மாத குழந்தைக்கு தாயான திருமதி.அர்ச்சனா, தனது மகப்பேறு விடுப்பு முடிந்து வேலைக்கு திரும்பி உள்ள நிலையில், கைவிடப்பட்ட குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். 

“குழந்தையை அந்த நிலைமையில் என்னால் பார்க்க முடியவில்லை. என்னுடைய குழந்தையே அழுவது போல இருந்தது. அதனால் உடனே தாய் பால் கொடுத்தேன்”என்று அர்ச்சனா பிபிசியிடம் கூறினார்.

கர்நாடக மாநில முதலமைச்சரின் நினைவாக, குழந்தைக்கு குமாரசாமி என பெயரிட்டனர். “இப்போது இந்த குழந்தை அரசுக்கு சொந்தமானது. குமாரசாமி என பெயரிடப்பட்டதால் இனி அரசு அரவணைப்பில் இருப்பான்” என்று திரு.நாகேஷ் கூறினார்.

பெங்களூரில் உள்ள சிஷு மந்திர் என்ற குழந்தைகள் காப்பகத்தில் விடப்பட்டது.

கடந்த புதன் கிழமை அன்று, முதலமைச்ச குமாரசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகவும் உணர்ச்சிகரமான செயல்” என்றும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய காவலரை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார்.

பெங்களூரு நகர காவல்துறையினர் தனது முகநூல் பக்கத்தில், ”பெங்களூரு நகர மகளிர் காவல் நிலைய காவலர் அர்ச்சனாவின் தாய்மை உதவிக்கு வணக்கம் சொல்கிறது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உதவியதற்கு நன்றி” என்றும் #ThankYouArchana என்ற ஹேஷ்டேக் பதிவிட்டும் பாராட்டுகள் தெரிவித்தனர்.

உடனே, அர்ச்சனாவிற்கு முகநூலில் பாரட்டுகள் குவியத் தொடங்கின. 

“மனித அன்பு வளரட்டும்”, “அனைத்து தாய்மார்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்” போன்ற கருத்துகள் பகிரப்பட்டன.Click for more trending news


.