This Article is From Oct 11, 2018

பெங்களூரில் இந்தியாவின் மூன்றாவது ’ஐகியா’ ஸ்டோர்!

இக்கியா இந்தியா முழுவதும் 40 ஸ்டோர்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

பெங்களூரில் இந்தியாவின் மூன்றாவது ’ஐகியா’ ஸ்டோர்!

முதன்முதலில் இந்தியாவில் ஐகியா ஸ்டோர் திறக்கப்பட்ட போது 40,000 பேர் பார்வையிட வந்திருந்தனர்.

Bengaluru:

பெங்களூரு: இந்தியாவின் மென்பொருள் தலைநகரான பெங்களூருவில் இக்கியா தன்னுடைய மூன்றாவது கிளையை 2020ல் திறக்கும். சுவீடனைச் சேர்ந்த பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனமான இக்கியா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் தங்களது முதல் கடையைத் தொடங்கியது. இரண்டாவது பர்னிச்சர் கடை அடுத்த வருடம் மும்பையில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத்தில் இருப்பதை போன்ற மிகப்பெரிய ஐகியா ஸ்டோரை பெங்களூருவின் நாகஸாந்த்ரா நகரில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் கர்நாடக துணை முதலமைச்சர் டாக்டர். ஜி.பரமேஷ்வரா கலந்து கொண்டார். அவர் என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில், ஐகியா நிறுவனம் 750 பேரை பணியில் அமர்த்தும் அதில், 50% பேர் நிச்சயம் பெண்களாக இருப்பார்கள் என்று உறுதியளித்துள்ளதாக அவர் கூறினார்.

இது குறித்து இக்கியாவின் துணை மேலாளர், பாட்ரிக் அண்டோனி கூறுகையில், ஹைதராபாத்தில் எங்களது நிறுவனம் மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இந்தியாவில் பலவிதமான ரசனையுள்ள மக்கள் உள்ளார்கள் அவர்களுக்கு ஏற்றது போலவும், வாங்ககக்கூடிய விலையிலும் பொருட்களை தயாரித்து வருகிறோம். பெங்களூருவில் அமைக்கப்பட இருக்கும் இக்கியா ஸ்டோர் 1,000 கோடி செலவில் கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட்டில் ஹைதராபாத்தில் முதல் கடையை திறந்தபோது, நகரில் வசிக்கும் மென்பொறியாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றோம். அதற்கு காரணம், அவர்களில் பலர் வெளிநாடுகளில் பணிபுரிந்த போது எங்களுடைய பர்னிச்சர்களால் ஈர்க்கப்பட்டதுதான்.

பெங்களூருவிற்கு பிறகு, டெல்லியில் எங்களது அடுத்த ஸ்டோரை திறப்போம். அடுத்த கட்டமாக புனே, சென்னை, சூரத் மற்றும் கொல்கத்தாவில் எங்களது கிளையை திறப்போம் என்று அவர் கூறினார். இக்கியா இந்தியா முழுவதும் 40 ஸ்டோர்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது.


 

.