This Article is From Aug 06, 2019

காரை விட்டு இறங்கினால் ஆடையை கிழித்துவிடுவேன் - மிரட்டிய ஊபர் ஓட்டுநர்

ஊபரிலிருந்து எனக்கு உதவி கிடைக்கவே இல்லை. நான் என் நண்பர்களை உதவிக்கு அழைத்தேன். ஒரு அவசரத்தில் பாதுகாப்பு உதவிக்கான அழைப்பு விடுத்தால் பயணிக்குத் தானே அழைப்பு வரவேண்டும். ஆனால் ஓட்டுநருக்கு அழைப்பு வருவது எப்படி பாதுகாப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

காரை விட்டு இறங்கினால் ஆடையை கிழித்துவிடுவேன் - மிரட்டிய ஊபர் ஓட்டுநர்

ஊபரிலிருந்து எனக்கு உதவி கிடைக்கவே இல்லை.

Bengaluru:

காரை விட்டு இறங்கினால் ஆடைகளை கிழித்துவிடுவேன் என்று ஊபர் ஓட்டுநர் தன்னை மிரட்டியதாக பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வளைதளத்தில்  குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஊபர் நிறுவனத்தின் மீது  ‘பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக' குற்றம் சாட்டியுள்ளார். அவரின் சமூகவளைதள பதிவில் “நான் இரவு உணவுக்கு பின்னர் ஊபர் கார் முன்பதிவு செய்தேன். அந்த ஓட்டுநர் நான் மோசமானவள் என்று போனில் யாரிடமோ சொன்னார். படித்த பெண்கள் எல்லாம் 7 மணிக்கு முன்பே வீட்டுக்குச் செல்ல வேண்டும். நண்பர்களுடன் மது அருத்தக் கூடாது என்று  தெரிவித்தார். நான் மது அருந்தவில்லை என்றும் உங்களது வேலையை மட்டும் பாருங்கள் என்று கூறினேன். அவர் திடீரென காரை மெதுவாக இயக்கினார். நான் பயந்து போய் ஊபரின் பாதுகாப்பு உதவியை நாடினேன். ஆனால், ஊபரில் இருந்து ஓட்டுநருக்கே அழைப்பு சென்றது. நான் கடுமையான போதையில் இருப்பதாக ஓட்டுநரும் கூறிவிட்டார். நான் வேறு வழியில்லாமல் கத்தி எனக்கு உதவி வேண்டுமென கேட்டேன். அவர்கள் வேறு ஒரு காரை அனுப்புவதாக தெரிவித்தனர். ஆனால், காரை விட்டு கீழே இறங்கினால் ஆடைகளை கிழித்துவிடுவேன் என்று ஓட்டுநர் மிரட்டினார்” என்று பதிவு செய்திருந்தார். 

ஊபரிலிருந்து எனக்கு உதவி கிடைக்கவே இல்லை. நான் என் நண்பர்களை உதவிக்கு அழைத்தேன். ஒரு அவசரத்தில் பாதுகாப்பு உதவிக்கான அழைப்பு விடுத்தால் பயணிக்குத் தானே அழைப்பு வரவேண்டும். ஆனால் ஓட்டுநருக்கு அழைப்பு வருவது எப்படி பாதுகாப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊபர் நிறுவனத்துடன் தொலைபேசியில் உரையாடிய உரையாடலையும் பதிவிட்டுள்ளார்.

ஊபர் நிறுவனம் பணத்தை முழுவதும் திரும்ப அளித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு ஊபர் உத்தரவிட்டுள்ளதாகவும் ஓட்டுநரை இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிகிறது.

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.