This Article is From Jul 06, 2018

சூதாட்டங்களை சட்ட ரீதியாக்க வேண்டும் - சட்ட கமிஷன் பரிந்துரை

நாட்டில் உள்ள விளையாட்டுகளின் மீது பந்தயம், சூதாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டும் எந்த பலனும் இல்லாததால், சட்ட கமிஷன் சில வழிமுறைகளை முன்வைத்துள்ளது

New Delhi:

புதுதில்லி: நாட்டில் உள்ள விளையாட்டுகளின் மீது பந்தயம், சூதாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டும் எந்த பலனும் இல்லாததால், சட்ட கமிஷன் சில வழிமுறைகளை முன்வைத்துள்ளது. பந்தயம், சூதாட்டங்களை சட்டப்பூர்வமாக்குவதன் மூலம், வெளிப்ப்டையான சூதாட்டத்தில் ஈடுபட முடியும். சூதாட்டத்தில் முதலீடு செய்யும் பணம் வரிக்கு உட்பட்டதாக்க வேண்டும் என சட்ட கமிஷனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசுக்கு வருமானம் ஈட்ட முடியும் என தெரிவித்துள்ளது.

சட்ட கமிஷனின் முக்கியாமான 10 புள்ளிகள்

• பாராளுமன்ற சட்டத்தின் அடிப்படையில் விதிமுறைகளுக்கு உட்பட்ட சூதாட்டங்களை மாநில அரசு அனுமதிக்கலாம் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி, கமிஷன் தலைமை பிஎஸ் சவுஹான் தெரிவித்தார்.
• மேலும், சூதாட்டங்களில் பணமில்லா பரிவர்தனை நடத்த அனுமதிக்கலாம். சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களின் ஆதார் எண், நிரந்தர கணக்கு எண் ஆகியவற்றை பெற வேண்டும்.
• தனி நபருக்கான குறிப்பிட்ட காலத்திற்கு, வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான சூதாட்ட பரிவர்தனைகளை செய்ய அனுமதிக்கலாம். உதாரணமாக காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு என பிரித்து கொள்ளலாம்
• அனுமதிக்கப்பட்ட வயது வரம்பிற்கு கீழ் உள்ளவர்கள், சூதாட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட கூடாது.
• மேலும், காசினோ, ஆன்லைன் விளையாட்டு துறையில் முதலீடு செய்ய அந்நிய செலாவணி, அந்நிய நேரடி முதலீடு சட்டங்களை கொண்டு வரவேண்டும்
• சூதாட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிப்பதன் மூலம், சுற்றுலா துறையின் வருவாய் அதிகரிக்கும், வேலை வாய்ப்புகள் கூடும் என கமிஷனில் தெரிவிக்கப்பட்டது.
• குறிப்பாக, இணையதளத்தில் செய்யப்படும் சூதாட்ட விளம்பரங்களில் தடைசெய்யப்பட்ட ஆபாச பயன்பாடு அனுமதிக்க கூடாது என தெரிவித்தது.
• சூதாட்டத்தில் உள்ள ஆபத்து குறித்தும், விளையாட்டின் விதிமுறைகள் குறித்தும் இணையதளத்தில் தெளிவாக பதிவிட வேண்டும்.
• கடந்த 2013 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஐபிஎல் சூதாட்டத்தை தொடர்ந்து, பெட்டிங் மற்றும் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்குவது குறித்து ஆலோசிக்குமாறு சட்ட கமிஷனிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது
• கடந்த 2013 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள சூதாட்ட சந்தை 3,00,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது என எப்ஐசிசிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவா, தாமன், சிக்கிம் போன்ற பகுதிகளில் சூதாட்டம் அதிகாரப்பூர்வம் ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

.