This Article is From Dec 31, 2018

காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் மக்களை எப்படி எதிர்கொள்வது? - ஆம் ஆத்மி எம்.பி. கேள்வி

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி வைக்கலாம் என தகவல்கள் வெளியாகின.

காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் மக்களை எப்படி எதிர்கொள்வது? - ஆம் ஆத்மி எம்.பி. கேள்வி

நாட்டை தவறான பாதையில் அழைத்துச் செல்வதாக பகவந்த் மன் குற்றம்சாட்டியுள்ளார்.

New Delhi:

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி வைக்கலாம் என தகவல்கள் வெளியான நிலையில், காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் மக்களை நம்மால் எப்படி எதிர்கொள்ள முடியும் என்று ஆம் ஆத்மி எம்.பி.கேள்வி எழுப்பியுள்ளார். 


ஆம் ஆத்மியின் சங்ரூர் மக்களவை உறுப்பினர் பகவந்த் மன் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது- 


பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் அரசை எதிர்த்து வருகிறோம். அக்கட்சிதான்  அங்கு ஆட்சியில் இருக்கிறது. இப்போது நாம் காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் மக்களை சந்தித்து எப்படி நம்மால் வாக்கு கேட்க முடியும். 


தற்போது வரையில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது என்ற எண்ணத்தில் ஆம் ஆத்மி கட்சி இல்லை. இவ்வாறு அவர் கூறினார். சமீபத்தில் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் அளித்த பேட்டியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பது என்பது காங்கிரஸ் தலைமை எடுக்கிற முடிவு என்று கூறினார். 


மற்றொரு  மூத்த தலைவர் அஜய் மக்கான் அளித்த பேட்டியில், அவர் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக இல்லை என்று தெரியவந்தது. 

.