காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பகவந்த் மன் தொடர்ந்து பேசி வந்தார்.
Chandigarh: மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பகவந்த் மன்னை பஞ்சாப் மாநில தலைவராக ஆம் ஆத்மி நியமித்துள்ளது.
இதுதொடர்பாக பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மாநில தலைவராக பகவந்த் மன் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சங்ரூர் நாடாளுமன்ற தொகுதியின் தலைவராக பகவந்த் மன் இருந்து வருகிறார்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு எதிராக பகவந்த் மன் தொடர்ந்து பேசி வந்தார்.
கடந்த தேர்தலில் காங்கிரசை விமர்சித்து வாக்குப் பெற்ற ஆம் ஆத்மி கட்சியால் எப்படி காங்கிரசுடன் சேர்ந்து வாக்கு சேகரிக்க முடியும் என பகவந்த் மன் கேள்வி எழுப்பினார். பகவந்த் மன்னை பஞ்சாப் மாநில தலைவராக நியமனம் செய்ததன் மூலம், காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி அமைவதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்து விட்டதாக கருதப்படுகிறது.