Read in English
This Article is From Sep 13, 2019

Piyush Goyal-ன் ஆக்சனுக்கு Newton-ன் ரியேக்சன் என்ன - டிவிட்டரின் வைரல் கற்பனைகள்!

Newton மற்றும் Einstein என இவர்கள் இருவரின் பெயர்களும் டிவிட்டர் டிரெண்டிங்கில் டாப் இடங்களை பிடித்தன.

Advertisement
விசித்திரம் Edited by

Newton மற்றும் Einstein குறித்த மீம்கள் சமுக வலைதளங்களில் பரவி வருகின்றன

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், புவியீர்ப்பு விசை குறித்து கூறிய கருத்து இன்றைய டிவிட்டர் கலகலப்பாக மாறிவிட்டது. டில்லியில் வர்த்தக சபையிடனான சந்திப்பின்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய பியூஷ் கோயலுக்கு 'அது நியூட்டனா, இல்லை ஐன்ஸ்டீனா' என்று சந்தேகம் வந்துவிட்டது போல. அந்த சந்திப்பில் "ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் உங்கள் பார்வை இருந்தால், நாடு 12 சதவிகிதம் என்ற வேகத்தில் வளர வேண்டும், இப்போது 6 சதவிகித வேகத்தில் வளர்கிறது" என்று கூறியிருந்தார். இது குறித்து மேலும் பேசுகையில், "கணக்குகளுக்குள் செல்லாதீர்கள். அந்த கணக்கு புவி ஈர்ப்பு விசையை கண்டுபித்த ஐன்ஸ்டீனுக்கு எப்போதும் உதவவில்லை...." என்று குறிப்பிட்டார். 

ஆமா புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடிச்சது நியூட்டனா, இல்லை ஐன்ஸ்டீனா? பாவம் அவரே கன்பியூசன் ஆயிட்டார் போல...

நியூட்டனால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புவி ஈர்ப்பு விசை, உடனே டிவிட்டர் வாசிகளை தட்டி எழுப்பி 'அது ஐன்ஸ்டீன் இல்லை, நியூட்டன்' என்று இந்த மத்திய அமைச்சரை கேலி செய்யவும், மீம்களை தீட்டவும் உதவியது. இதன் விலைவாக #PiyushGoyal ஹேஸ்டேக் உடன் Newton மற்றும் Einstein என இவர்கள் இருவரின் பெயர்களும் டிவிட்டர் டிரெண்டிங்கில் டாப் இடங்களை பிடித்துள்ளது.

Advertisement

பியூஷ் கோயலின் இந்த கருத்திற்கு டிவிட்டரில் வெளியிடப்பட்ட சில கேலியான பதிவுகளின் தொகுப்பு இதோ!

இதன் பின்னர், கோயல் தான் கூறியதற்கான விளக்கத்தை வெளியிட்டிருந்தார்.

Advertisement