Read in English বাংলায় পড়ুন
This Article is From Dec 14, 2019

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் மாபெரும் பேரணி!

Bharat Bachao Rally: நாட்டின் பொருளாதார நிலை, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, விவசாயிகள் துயரம் மற்றும் வேலையில்லா திண்டடாட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரம் தொடர்பாக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகளின் பின்னணியில் இந்த பேரணி நடைபெற உள்ளது.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் மாபெரும் பேரணியில் ஈடுபட உள்ளது. இதில், சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு மசோதாவைக் கொண்டு வந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும், இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், நாட்டின் பொருளாதார நிலை, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, விவசாயிகள் துயரம் மற்றும் வேலையில்லா திண்டடாட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரம் தொடர்பாக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகளின் பின்னணியில் இந்த பேரணி நடைபெற உள்ளது. 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இந்த பேரணியில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். 

Advertisement

மேலும், டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கட்சி தொண்டர்களை இந்த பேரணிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் டெல்லி ராம்லீலா மைதானத்தில் கூடி கட்சியின் பலத்தை காட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களை வரவேற்க டெல்லி விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில், பலத்த ஏற்பாடுகளை கட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

Advertisement

டெல்லி முழுவதும், ராம்லீலா மைதானத்தை சுற்றியும் சோனியா மற்றும் ராகுல் காந்தியின் மாபெரும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக டெல்லி காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த சுபாஷ் சோப்ரா கூறும்போது, இந்த பேரணியை விளம்பரப்படுத்த தீவிர பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், பேரணி நடைபெறும் இடத்தின் 10 கி.மீ சுற்றளவில் மூன்று வண்ண கொடிகள் மற்றும் பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.  

Advertisement