This Article is From Jun 07, 2019

இதுவரை இல்லாத வசூல் சாதனை புரிந்த சல்மான் கானின் ‘பாரத்’ திரைப்படம்; எவ்வளவு தெரியுமா?

ரம்ஜானின் போது சல்மான் கானின் திரைப்படங்கள் வெளிவருவது வழக்கம்

இதுவரை இல்லாத வசூல் சாதனை புரிந்த சல்மான் கானின் ‘பாரத்’ திரைப்படம்; எவ்வளவு தெரியுமா?

53 வயதாகும் சல்மான் கானின் திரைப்படங்களுக்கு இன்னும் மவுசு குறையவில்லை என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • On opening day, 'Bharat' made a score of Rs 42.30 crore
  • This marks Salman's highest opener ever
  • 'Bharat' is also Salman's highest Eid opener
New Delhi:

சல்மான் கான். இந்த ஒற்றைப் பெயர் போதும். 53 வயதாகும் சல்மான் கானின் திரைப்படங்களுக்கு இன்னும் மவுசு குறையவில்லை என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. ரம்ஜான் தினத்தன்று வெளியான ‘பாரத்' திரைப்படம், தனது முதல் நாளில் 42.30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரம்ஜானின் போது சல்மான் கானின் திரைப்படங்கள் வெளிவருவது வழக்கம். அப்படி வெளிவந்த பெரும்பான்மை படங்கள் சூப்பர் - டூப்பர் ஹிட் அடித்துள்ளன. அதேபோல, படு மாஸ் ஓப்பனிங்கும் கிடைக்கும். 

இந்த முறையும் ‘பாரத்'-க்கு அந்த மாஸ் ஓப்பனிங் கிடைத்தது. இன்னும் சொல்லப் போனால், இதுவரை இல்லாத அளவுக்கான ஓப்பனிங் கிடைத்துள்ளது. 

இது குறித்து பிரபல திரைப்பட வர்த்தக வல்லுநர் தருண் ஆதர்ஷ், “சல்மான் கான் இந்திய அளவில் மிகப் பெரும் தாக்கத்தை ‘பாரத்' மூலம் ஏற்படுத்தியுள்ளார். மீண்டும் பாலிவுட்டில், தன்னால்தான் மிகப் பெரிய ஓப்பனிங் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார். இதற்கு முன்னர் சல்மானின் ‘டைகர் ஸிந்த ஹே' (34.10 கோடி ரூபாய் முதல் நாள் வசூல்), ‘சுல்தான்' (36.54 கோடி ரூபாய் முதல் நாள் வசூல்) செய்துள்ளது. ஆனால் அதை அனைத்தையும் முறியடித்து ‘பாரத்' 42.30 கோடி ரூபாய் முதல் நாள் வசூல் செய்துள்ளது” என்று தகவல் தெரிவித்துள்ளார். 

பாரத் வெளியான அதே நாளில் இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையிலான உலகக் கோப்பைப் போட்டியும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த சவாலையும் சல்மான் கான் துடைத்தெறிந்துள்ளார்.

‘பாரத்' படத்தின் வெற்றி குறித்து ட்விட்டரில் சல்மான், “இந்த வெற்றி எனக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. படத்தில் ஒரு காட்சியில் நமது நாட்டின் தேசிய கீதம் வரும். அப்போது தியேட்டரில் இருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். நமது நாட்டுக்கு இதை விட ஒரு பெரிய மரியாதை இருக்க முடியாது. ஜெய் ஹிந்த்” என்று நெகிழ்ச்சியுடன் ட்வீட்டினார். 

.