This Article is From Feb 12, 2019

'பாரத ரத்னா விருது என்பது ஏமாற்று வேலை' - பூபன் ஹசாரிகாவின் மகன் கடும் தாக்கு

அசாம் இசைக் கலைஞர் பூபன் ஹசாரிகா, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, சமூக ஆர்வலர் நேதாஜி தேஷ்முக் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த மசோதா விவகாரம் வடகிழக்கு மாநிலங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Guwahati:

பாரத ரத்னா விருது என்பது ஏமாற்று வேலை என்று பூபன் ஹசாரிகாவின் மகன் டெஸ் ஹசாரிகா மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். குடியுரிமை திருத்த மசோதா வடகிழக்கு மாநிலங்களில் பெரும் பிரச்னையை எற்படுத்தி வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

வடகிழக்கு மாநிலங்களில் பாகிஸ்தான், ஆப்கன், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக இந்து, ஜெய்ன், சீக்கிய, புத்த மதத்தை சேர்ந்தவர்கள் குடியேறியுள்ளனர். அவர்கள் 12 ஆண்டுகளை கடந்து விட்டால் அவர்களுக்கு இந்திய குடியுரிமையை மத்திய அரசு வழங்கி விடும். 

இதில் திருத்தம் கொண்டு வரப்பட்டு 12 ஆண்டுகளை 6 ஆண்டுகளாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பான திருத்த மசோதா கடந்த 2016-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

மக்களவையில் மசோதா நிறைவேறிய நிலையில், தற்போது மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இது வடகிழக்கு மாநில மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் செயல் என்று பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே அசாம் இசைக்கலைஞர் பூபன் ஹசாரிகாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளது. 

அவருடன் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, சமூக ஆர்வலர் நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தந்தைக்கு விருது வழங்கப்படுவது குறித்து பூபன் ஹசாரிகாவின் மகன் டெஸ் ஹசாரிகா கூறியதாவது-

ஒருபக்கம் குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு திருத்த பார்க்கிறது. இன்னொரு பக்கம் எனது தந்தைக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது அறிவிப்பு என்பது ஒரு ஏமாற்றுவேலை. குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற முயற்சி செய்வது என்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

.