This Article is From Jul 01, 2020

திருமண விழாவில் கொரோனா! சிகிச்சைக்கான செலவை மணமகன் குடும்பத்தினர் ஏற்க உத்தரவு!

திருமணத்திற்கு வருகை தந்த, 58 பேர் தனிமைப்படுத்தப்பட வேண்டியதிருந்தது. இதுபோன்ற நிகழ்வுகளில் 50 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாது என்ற நிலையில், அந்த விழாவில் 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக தெரிகிறது 

திருமண விழாவில் கொரோனா! சிகிச்சைக்கான செலவை மணமகன் குடும்பத்தினர் ஏற்க உத்தரவு!

திருமண விழாவில் கொரோனா! சிகிச்சைக்கான செலவை மணமகன் குடும்பத்தினர் ஏற்க வேண்டும்!Representational)

Jaipur:

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி, ராஜஸ்தானின் பில்வாராவில் நிகழ்ந்த திருமணத்தால், மணமகனின் குடும்பத்தினருக்கு தேவையில்லாத செலவை வைத்துள்ளது. திருமணத்தில் பங்கேற்ற ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 16க்கும் அதிகமானோர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக மணமகனின் குடும்பத்தினருக்கு, ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ரூ.6.26 லட்சம் அபராதத்தை தவிர்த்து, பாதிக்கப்பட்ட 15 பேருக்கும் சிகிச்சையளிக்க மணமகனின் குடும்பத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருமணத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மேலும், 58 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் உணவு, தனிமைப்படுத்தல் வார்டில் பெறும் சேவைகள், வைரஸ் சோதனைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து வருவதற்கான ஆம்புலன்ஸ் பயன்பாடு உள்ளிட்ட அனைத்தையும் மணமகனின் குடும்பத்தினரிடமிருந்து செலவை அரசு பிரித்து வாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த திருமண விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை மாவட்ட நிர்வாகம் ஜூன் 19ம் தேதியன்று உறுதிப்படுத்தியது. இதையடுத்து, அவரது தொடர்புகளை தடமறிந்தபோது, மணமகன், அவரது தந்தை மற்றும் தாத்தா உட்பட 16 பேர் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து, திருமணத்திற்கு வருகை தந்த, 58 பேர் தனிமைப்படுத்தப்பட வேண்டியதிருந்தது. இதுபோன்ற நிகழ்வுகளில் 50 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாது என்ற நிலையில், அந்த விழாவில் 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக தெரிகிறது 

இந்த விவகாரத்தை தீவிரமாக கவனித்த, பில்வாரா மாவட்ட ஆட்சியர் மணமனின் குடும்பத்திற்கு அபராதம் விதித்தார். தொடர்ந்து, அந்த குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

.