This Article is From May 28, 2020

மகள், பேரப்பிள்ளைகள் உள்பட 4 பேருக்காக மட்டும் டெல்லிக்கு தனி விமானம் அனுப்பிய கோடீஸ்வரர்!

டெல்லிக்கு வந்த விமானம் ஏர்பஸ் - 320 என்ற ரகத்தை சேர்ந்தது. இதனை வாடகைக்கு அமர்த்துவது என்றால் குறைந்தது ரூ. 20 லட்சம் வரை செலவாகும் என விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

மகள், பேரப்பிள்ளைகள் உள்பட 4 பேருக்காக மட்டும் டெல்லிக்கு தனி விமானம் அனுப்பிய கோடீஸ்வரர்!

கடந்த திங்கள் முதல் நாட்டில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை தொடங்கியது.

Bhopal:

நெரிசலை தவிர்ப்பதற்காக தனது மகள் மற்றும் பேரப்பிள்ளைகள் 2 பேர் பணிப்பெண் ஒருவர் ஆகியோருக்காக மட்டும் தனி விமானத்தை டெல்லிக்கு அனுப்பியுள்ளார் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர். 

பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை கடந்த திங்கட்கிழமை முதற்கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. 

உள்நாட்டு விமானப் பயணத்தின்போது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, மாஸ்க் உபயோகம் உள்ளிட்ட வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இருப்பினும், கணிசமான அளவுக்கு பயணிகள் இருப்பதால் சமூக இடைவெளி சாத்தியப்படுமா என்ற கேள்விகள் எழுகின்றன. இந்த நிலையில், தனது மகள் மற்றும் 2 பேரப்பிள்ளைகள் பணிப்பெண் ஒருவர் ஆகிய 4 பேருக்காக மட்டும் தனி விமானத்தை டெல்லிக்கு அனுப்பியுள்ளார் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கோடீஸ்வரர். 

இதற்காக மத்திய பிரதேசத்தின் போபாலில் இருந்து புறப்பட்ட விமானம் திங்களன்று டெல்லிக்கு வந்து, 4 பேரை மட்டும் அழைத்துக் கொண்டு போபாலுக்கு திரும்பியது. 

சிறப்பு விமானத்தில் பயணித்தவர்களின் விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. ஆனால் கிடைத்த தகவலின்படி, கோடீஸ்வரர் மத்திய பிரதேசத்தில் பல மதுபான ஆலைகளை நடத்தி வருகிறார் என்று மட்டும் தெரியவந்துள்ளது. 

இதுதொடர்பாக போபால் விமான நிலைய இயக்குநர் அனில் விக்ரமை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவர் தொடர்பு எல்லைக்குள் இல்லை.

டெல்லிக்கு வந்த விமானம் ஏர்பஸ் - 320 என்ற ரகத்தை சேர்ந்தது. இதனை வாடகைக்கு அமர்த்துவது என்றால் குறைந்தது ரூ. 20 லட்சம் வரை செலவாகும் என விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

.