This Article is From Apr 10, 2020

குடும்பத்தை காக்க வீட்டிற்கு செல்லாமல் காரிலேயே தங்கும் மருத்துவர்கள்!! குவியும் பாராட்டு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் வீடுகளுக்கு சென்றால் வீட்டில் உள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்கள் காரிலேயே தங்குகின்றனர். சில மருத்துவர்கள் வாரக்கணக்கில் காரில் தங்கிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

குடும்பத்தை காக்க வீட்டிற்கு செல்லாமல் காரிலேயே தங்கும் மருத்துவர்கள்!! குவியும் பாராட்டு

மருத்துவர்கள் தினமும் நோயாளிகள், நர்ஸ்கள் என குறைந்தது 100 பேரை தொடர்பு கொண்டு பேசுகின்றனர்.

ஹைலைட்ஸ்

  • கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்
  • மருத்துவர்கள் வீட்டிற்கு சென்றால் அங்குள்ளவர்களுக்கு தொற்று ஏற்படலாம்
  • காரிலேயே தங்கி சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு பாராட்டு குவிகிறது.
New Delhi:

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தங்களது வீட்டில் உள்ளவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க காரிலேயே தங்கி சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் வீடுகளுக்கு சென்றால் வீட்டில் உள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்கள் காரிலேயே தங்குகின்றனர். சில மருத்துவர்கள் வாரக்கணக்கில் காரில் தங்கிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் சச்சின் நாயக் மற்றும், சச்சின் பட்டிதார் ஆகியோர் மருத்துவர்களாக உள்ளனர். அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினந்தோறும் சிகிச்சை அளிக்கின்றனர். 

மருத்துவமனையின் பணியை முடித்துக் கொண்டு இருவரும் வீட்டிற்கு செல்லாமல் தங்களது காரிலேயே தங்கிக் கொள்கின்றனர். இந்த காருக்குள் பெட்ஷீட், துணிகள், லேப்டாம் உள்ளிட்டவை இருக்கின்றன. 

வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படக்கூடாது. அதே நேரத்தில் நோயாளிகளையும் கவனிக்க வேண்டும் என்பதற்காக இரு மருத்துவர்களும், காரையே வீடாக மாற்றியுள்ளனர். மருத்துவர் சச்சின் நாயக்கிற்கு 3 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. 

அவர் அளித்த பேட்டியில், 'கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது. நாங்கள் தயாராகுவதற்கு முன்பாகவே, பாதிப்பு தீவிரம் அடைந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை நல்ல முறையில் கவனித்து கொரோனாவை ஒழிப்பதுதான் எங்களது முதல் வேலை.

பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து இரத்தம், சளி மாதிரிகளை நாங்கள் பெறுகிறோம். ஒருநாளைக்கு நர்ஸ், பணியாளர்கள் என 100 பேரை தொடர்பு கொள்கிறோம். இது பரவும் நோய் என்பதால் நான் எனது காரிலேயே தங்கி வருகிறேன்' என்றார்.

0attm6a4

கார்களுடன் மத்தியப் பிரதேச மருத்துவர்கள்.

மற்றொரு மருத்துவரான சச்சின் பட்டிதார், கடந்த 31-ம்தேதியில் இருந்தே காருக்குள் இருக்கிறாராம். உள்ளேயே பெட்ஷீட், சோப், டியோட்ரன்ட் உள்ளிட்ட அனைத்தும் வைத்துள்ளார். அவரது வீட்டில் வயது முதிர்ந்தவர்கள் உள்ளனர். இதனால் தன் மூலமாக அவர்களை கொரோனா பாதித்து விடக்கூடாது என்பதுதான் இந்த மருத்துவரின் கவலையாக உள்ளது. 

காருக்குள்ளே வசிக்கும் இந்த இரு மருத்துவர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வந்துள்ளன. அவர்களை ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் தனது ட்விட்டர் பதிவில், 'கொரோனாவை எதிர்த்து உங்களைப் போன்றவர்களால் மத்தியப் பிரதேச மாநிலமும், நானும் பெருமை அடைகிறோம். இதே உறுதியுடன் நாம் போராடினால் கொரோனாவை சீக்கிரம் விரட்டி விடுவோம். இருவருக்கும் வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் 359 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 26 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.  

.